அதிராம்பட்டினம் பேரூராட்சியில் 100% குடிநீர் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, அதிரை மேம்பாட்டுச் சங்கமம் சார்பில் மாவட்ட ஆட்சியரக குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் மாதாந்திரக் கட்டணம், எதிர்வரும் அக்.1 ந் தேதி முதல் ரூ.50 லிருந்து ரூ.100 ஆகவும், குடிநீர் இணைப்புக் கட்டணம் ரூ.3 ஆயிரத்திலிருந்து, ரூ.7 ஆயிரமாகவும் 100% உயர்த்தப்படவுள்ளது.
இவ்வாறு திடீரென கட்டணங்கள் உயர்த்தப்படுவதால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அதிக அளவில் அவதி அடைவர் எனக்கூறி, உயர்த்தப்பட்ட கட்டணத்தைத் திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்தி, அவ்வமைப்பின் தலைவர் எம்.எஸ்.எம் முகமது யூசுப் தலைமையில், அவ்வமைப்பினர் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரக குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல் அவர்களிடம் இன்று (செப்.10) திங்கட்கிழமை கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக அவ்வமைப்பினரிடம் உறுதி அளித்தாராம்.
இதில், அமைப்பின் பொருளாளர் ஏ.மகபூப் அலி, சட்ட ஆலோசகர் வழக்குரைஞர் ஏ.முனாப், எம்.எஸ்.எம். ராபியா, எம். நிஜாமுதீன், ஏ.சாகுல் ஹமீது, இம்தியாஸ் அகமது, எம்.இசட் பஷீர் அகமது, எம்.எஸ் முகைதீன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
















This comment has been removed by the author.
ReplyDeleteநல்லது. இவர்களின் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅன்புடன்,
முத்துப்பேட்டை நியூஸ் குழுவினர்
(https://www.muthupet.in)