மாவட்ட லயன்ஸ் சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா பட்டுக்கோட்டை தனியார் திருமண மஹாலில் சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு லயன்ஸ் சங்க மாவட்டத் தலைவர் (ஆசிரியர் தினம்) எஸ்.டி.எஸ் செல்வம் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக லயன்ஸ் சங்க மாவட்ட ஆளுநர் எச்.சேக்தாவூது, மாவட்ட துணை ஆளுநர் ஜெ. கார்த்திக்பாபு, மாவட்ட இரண்டாம் துணை ஆளுநர் எஸ். சேதுக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
சிறப்பு அழைப்பாளர்களாக பட்டிமன்ற பேச்சாளர் சேஷாத்ரி ராஜகோபால், திரைப்பட நடிகை கஸ்தூரி, ஓடந்துறை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஆர்.சண்முகம் ஆகியோர் கலந்துகொண்டு, ஆசிரியர்களுக்கு கல்வி பாரதி விருது வழங்கி பாராட்டுத் தெரிவித்தனர். இதில், அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் பரிந்துரையின் பேரில், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி வணிக ஆட்சியல் துறைத் தலைவர் பேராசிரியர் ஓ.எம் ஹாஜா முகைதீன், காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இடைநிலை ஆசிரியை கே. ஆஷா ஆகியோருக்கு கல்வி பாரதி விருது வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
விழாவில் சிறப்பு அழைப்பின் பேரில் அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கத் தலைவர் பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர், செயலர் எம்.அப்துல் ரஹ்மான், பொருளாளர் எம்.ஏ அப்துல் ஜலீல், மாவட்டத் தலைவர்கள் பேராசிரியர் கே.செய்யது அகமது, கபீர், எம்.அகமது, எம். சாகுல் ஹமீது, டி.பி.கே ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு நல்லாசிரியர் விருது பெற்ற பேராசிரியர் ஓ.எம் ஹாஜா முகைதீன், ஆசிரியை கே.ஆஷா ஆகியோரை பாராட்டி வாழ்த்தினர்.




எங்களது ஹாஜா சார் மேலும் பல விருதுகளும் சாதனைகளும் பெற வாழ்த்துகிறேன்.
ReplyDelete