![]() |
| அதிரை கடற்கரை செல்லும் சாலையில் உள்ள விவசாய தோப்பில் பட்டுப்போன தென்னை மரங்கள் |
அதிராம்பட்டினம் சுற்றுவட்டார கிராமங்களில், போதிய மழையில்லாததால் தென்னை மரங்கள் காய்ப்புத்திறன் குறைந்து பட்டுபோய் வருகிறது.
அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் தென்னை விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. இப்பகுதி விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் தேங்காய்கள் பிற மாநிலங்களுக்கு லாரிகள் மூலம் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இந்நிலையில், இப்பகுதியில் கடந்த ஒரு சில ஆண்டுகளாக போதிய மழையில்லாததால், தென்னையின் காய்ப்பு திறன் குறைந்து பட்டுபோய் வருகிறது.
இதுகுறித்து விவசாயி அதிரை ஏ.சாகுல் ஹமீது கூறியது;
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் போதிய மழை பொழியவில்லை. வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இதனால், தென்னையின் காய்ப்பு திறன் குறைந்து பட்டுபோய் வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
கடந்த ஜூலை 22 ந் தேதி கல்லணை கால்வாயிலிருந்து டெல்டா சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிட்டு ஒரு மாதத்திற்கு மேலாகியும், ராஜாமடம் கால்வாய் வழியாக வர வேண்டிய தண்ணீர் கடைமடைப்பகுதியான அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை உள்ளிட்ட பகுதிகளுக்கு இன்னும் வந்து சேரவில்லை. இதனால், தென்னை மரங்கள் பட்டுபோய் வருகிறது. மீண்டும் தென்னை மரங்களை வளர்த்து பயணடைய குறைந்த பட்சம் 10 முதல் 15 ஆண்டுகள் வரை ஆகும். பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.




No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.