.

Pages

Thursday, December 4, 2014

கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட் அடுத்த ஆண்டு நவம்பர் 24-ந்தேதிக்கு பிறகு செல்லாது !

இந்திய நாட்டின் குடிமகன் வெளிநாடு செல்ல வேண்டுமெனில் அவருக்கு பாஸ்போர்ட் தேவை. இந்த பாஸ்போர்ட் முன்பு கையால் எழுதப்பட்டிருந்தது. தற்போது நவீன காலத்தில் அவை கம்ப்யூட்டர் மயமாக மாறியுள்ளது. ஏற்கனவே உள்ள கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட் அடுத்த ஆண்டு நவம்வர் 24-ந்தேதி முதல் செல்லாது என்று மத்திய அரசு பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளது.

பாராளுமன்றத்தில் தி.மு.க. உறுப்பினர் கனிமொழி கேட்ட கேள்விக்கு வெளியுறத்துறை இணை அமைச்சர் வி.கே. சிங் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உலகம் முழுவதும் கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் 24-ந்தேதிக்குப் பின் செல்லாது என்று சர்வதேச விமான போக்குவரத்து அமைப்பு தெரிவித்துள்ளது. நவம்பர் 25-ந்தேதி முதல் வெளிநாடுகள், இதுபோன்ற பாஸ்போர்ட் வைத்திருந்தவர்களை தடுத்து நிறுத்தலாம்.

கடந்த 2001-ம் ஆண்டுக்குப் பிறகு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பாஸ்போர்ட் (மெஷின் ரீடபிள் பாஸ்போர்ட்) வழங்கப்பட்டு வருகிறது. 1990-ம் ஆண்டுகளில் கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. இதன் 20 வருட செல்லுபடியாகும் காலம் முடிந்துவிட்டது. இந்தியாவில் வசிக்கும் இந்திய குடிமகன்கள் தங்கள் 20 வருடத்திற்கு முன்பு உள்ள பழைய பாஸ்போர்ட்டுகளை நவம்பர் 24-ந்தேதிக்குள் மாற்றி வெளிநாடுகளுக்கு சிரமமின்றி செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நன்றி: மாலை மலர்

1 comment:

  1. பதிவுக்கு நன்றி.‎
    தகவலுக்கும் நன்றி.‎

    ச........மா செல்லாது.‎
    ‎ ‎
    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.‎
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.‎
    Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
    Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.