தரற்போது இதையும் மீறி ஷார்ஜா நகரில் பால்கனிகளில் துணிகள் உலர்த்தப்படுகின்றன. அவ்வாறு பால்கனியில் துணிகள் உலர்த்தும் வீடுகளூக்கு அபராதம் போடப்பட்டு உள்ளது. இவ்வாறு 6,500 வீடுகளுக்கு அபராதம் போடப்பட்டு இரண்டாவது அரையாண்டில் மட்டும் 32.5 லட்சம் திர்ஹம் ( இந்திய மதிப்பில் சுமார் ₹ 5.63 கோடி ) அபாரதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து சிறப்பு பிரிவு இயக்குனர் பைசல் அல் முல்லா கூறும் போது, நகராட்சி சார்பில் பால்கனியில் துணிகளை தொங்கவிடுவதால் நகரின் அழகு மற்றும் தூய்மை பாதிகிகபடுவதாக பிரச்சாரங்கள் செய்யபடுகிற்து. மேலும் அடிக்கடி ஆய்வுகளும் நடத்தப்படுகிறது.
ஐக்கிய அரபு நாட்டில் உங்கள் வீடுகளில் பால்கனியில் கூடுதலாக பொருட்களை வைக்க சட்டம் அனுமதிப்பது இல்லை. இது அபராதத்துக்கு உள்ளாகும். பால்கனியில் டிஷ் ஆண்டனா வைப்பது மற்றும் துணியை உலர்த்த தொங்கவிடுவது கூடாது.மேலும் டேபிள், சேர்கள் போடுவது, அல்லது செடிகள் மற்றும் பானைகள் மூலம் செடி வளர்ப்பதும் கூடாது.இதற்கு 500 திராம் அபராதம் விதிக்கப்படும் பொருட்களும் பறிமுதல் செய்யபடும். சூரிய ஒளியை தடுக்க திரைகள் போடலாம் ஆனால் அதை மற்ற உபயோகத்திற்கு பயன்படுத்த கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.