.

Pages

Monday, December 15, 2014

அதிரையில் ரேஷன் கார்டில் உள்தாள் ஒட்டும் பணி துவங்கியது !

ரேஷன் கார்டில் 2015ம் ஆண்டுக்கான உள்தாள் ஒட்டும் பணி இன்று காலை முதல் அதிரையில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் துவங்கியது. இன்று முதல் நாள் என்பதால் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. தொடர்ந்து இன்றும், நாளையும் முழு நேர பணிகளிலும், 17ம் தேதிக்கு பிறகு, காலையில் ரேஷன் பொருட்களும், மாலையில் உள்தாள் ஒட்டும் பணியிலும் ஈடுபட முடிவு செய்துள்ளதாக ரேஷன் கடை ஊழியர்கள் சிலர் தெரிவித்தனர்.

குடும்பத் தலைவரோ அல்லது குடும்ப அட்டையில் பெயர் உள்ளவர்களோ உள்தாள் ஒட்டுவதற்காக கடைகளுக்குச் செல்லலாம். குடும்பத் தலைவரைத் தவிர்த்து வேறு யாரேனும் செல்ல விரும்பினால், அவர்களுக்கு 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். அவர்கள் பதிவேட்டில் கையெழுத்திட்டு விட்டு உள்தாள்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. https://www.facebook.com/photo.php?fbid=718652471545344&set=a.266078763469386.61476.100002017942067&type=1&theater

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.