.

Pages

Saturday, December 6, 2014

தமிழக அரசின் இலக்கிய விருதை பெற்ற அதிரை 'கம்யூட்டர்' புகாரி !

அதிரை சேர்ந்தவர் 'கம்யூட்டர்' புகாரி. இவர் தமிழ் இலக்கியத்தின் மீது தீராத பற்றுகொண்டவர். இவருடைய இலக்கிய சேவையை பாராட்டி மலேசியா அரசு பல்வேறு விருதுகளை வழங்கி கெளரவித்துள்ளது. தமிழக அரசின் இயல் இசை நாடக மன்றம் மற்றும் மலேசிய கலை பண்பாட்டு சபா சார்பில் சிறப்பு விருதையும் பெற்றுள்ளார். மாணவர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் படித்து பயன்பெற வேண்டி 'வருங்காலத் தூண்கள்' என்ற நூலையும் எழுதி வெளியிட்டுள்ளார். இதில் மலேசியா அரசில் பல்வேறு முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் வாழ்த்துரை வழங்கி கெளரவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மலேசியாவில் வெளியாகும் பிரபல தமிழ் நாளிதழ்களில் கட்டுரை, சிறுகதை ஆகியவற்றை எழுதியுள்ளார். தமிழ் இலக்கியம் தொடர்பான பல்வேறு நிகழ்சிகளில் தொடர்ந்து பங்குபெற்று வருகிறார்.

1 comment:

  1. எனது தம்பி (சாச்சா மகன்) புகாரி சமுதாயத்திற்கும் தமிழுக்கும் மென்மேலும் பல சாதனைகளை புரிய வாழ்த்துக்கள் பல ....

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.