அயலகத்தில் இருந்து பணிவிடுப்பில் ஊர் வந்த நண்பனை பார்த்து உனக்கென்னப்பா நல்ல சம்பாத்தியம், வருஷம் ஒரு லீவு, ஜாலியான வாழ்க்கைதான் என்று அவன் நண்பன் சொல்ல மேலே சொன்ன முட்டையிடும் கோழிக்குத்தான் அதன் வருத்தம் தெரியும் எனும் பழமொழியை நண்பனுக்கு பதிலாய் கூரியவர்!? ஒரு மாத விடுப்பில் ரிட்டர்ன் டிக்கட்டோடு வந்திருப்பதுதான் ! அடுத்த வரியின் அர்த்தம் பொதிந்த தத்துவ வாசகம் ஆகும்.
பொதுவாகவே அயலகத்தில் பணிபுரிவோர் அனைவரது நிலையும் அப்படித்தான் உள்ளது கேட்டால் குடும்ப சூழ்நிலை என்பார்கள் மறுப்பதற்கில்லை ஆனால் உற்றார், உறவினர், பெற்ற பிள்ளை, கட்டிய மனைவி பெற்றோர்கள் இவர்களைப்பிரிந்து! வருமானத்திற்காக மட்டுமே எனும் காரணம் மிகவும் துரதிஷ்டமான விஷயமாகும். இது ஒரு ஊருக்கு 10 சதவீத நபர்களுக்கு மட்டும் ஏற்படுமானால் அதுவே சாபக்கேடுதான்!? ஆனால் 80 சதவீத மக்களுக்கு ஏற்படுவதென்பது எப்படி குடும்ப சூழ்நிலை என்று ஏற்றுக்கொள்ள முடியும் ? மாறாக இது அந்த சமுதாய மக்களால் ஏற்படுத்திக்கொண்ட மோசமான சம்பிரதாய சூழ்நிலை என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
கட்டாயம் சொந்த வீடு அதுவும் அடுக்குமாடி வீடு, எத்தனை பெண் பிள்ளைகள் உள்ளனவோ அத்தனைக்கும் தனித்தனி வீடு இது யாரால் ஏற்படுத்தப்பட்டது ஏன் ஏற்பட்டது ? பெரியப்பா ரெண்டு பெண்ணை பெற்றார் தனித்தனியாய் வீடு கட்டி கொடுத்தார், பெரிய அண்ணன் அயலகம் சென்றார் அவர் தம் பிள்ளைக்கு ஆடம்பரமாய் கல்யாணம் செய்து வைத்தார் பெருமை பாராட்டப்பட்டார்!? எனக்கும் ரெண்டு பெண் பிள்ளை. என்ன செய்ய ஏற்பட்டது குடும்ப சூழல் முட்டையிட்ட கோழியாய் வேதனை மறந்து திரும்ப திரும்ப செல்கிறேன் அயலகம்.
ஒரு ஜோசியக்காரனிடம் சென்ற ஒரு மனிதர் என் எதிர்காலம் பற்றி சொல்லுங்களேன் என்று கையை காட்ட ! இந்த வருடம் முழுவதும் சிறமம்தான் என்றாராம். மனக்கவலையோடு அடுத்த வருடம் எப்படி இருக்கும் கொஞ்சம் பார்த்து சொல்லுங்கள் என்று கேட்க மேலும் மோசமாகும் என்று ஜோசியர் சொல்ல அந்த மனிதர் கவலை தோய்ந்தவராக மூன்றாம் வருடம் சரியாகிவிடுமா என்று ஏக்கத்தோடு கேட்டாராம் ஜோசியர் நிதானமாய் உனக்கு ஏற்பட்ட கஷ்டமே பழகிப்போய்விடும் என்று சொன்னாராம்.
காலையிலேயே வெல்லடை, இடியப்பம் நுரைஈரல் ஆனத்தோடு பிறட்டி
உண்டவர்களுக்கு காலை உணவே இல்லாத நாடும் பழகிப்போனது போல!?. இன்னும் சொல்லப்போனால் ஊர் வந்தாலும் காலை உணவில் நாட்டமில்லாது போகிறதே!
அதுபோல் அயல் நாட்டில் போன புதிதில் கடும் வெயிலும், கடுங்குளிரும் வாட்டி வதைக்கும். மொழியும் சிறமமாய் இருந்தது ஆனால் போகப்போக பழகிவிட்டது இப்படி சிறமங்களை பழக்கப்படுத்திக்கொள்ள என்ன காரணம் ? நம் சமூகம் ஏற்படுத்தி வைத்த சம்பிரதாயத்தால் ஏற்பட்ட தேவைகள்தானே காரணம்.
ஒரு ஆண் மகனுக்கு தம் மனைவி, மக்களின் உணவு, உடை, போதிய கல்வி இவைகள்தான் அவனின் கடமையாகும் இருப்பிடம்கூட சொந்தமாய் இருக்க வேண்டிய கட்டாயமில்லை வாடகை வீட்டில் தவறாமல் வாடகை கொடுத்து வந்தாலே போதும் ஆனால் இந்த சமூகம் என்ன சம்பிரதாயம் வைத்திருக்கிது? மகளுக்கு அத்திவாசிய தேவைகள் அனைத்தும் சரிவர செய்தும், வீடு கட்டி கொடுக்க முடியாத தந்தையை கையாலாகாதவன் என்றல்லவா சொல்கிறது!
பக்கத்து ஊரில் உள்ள இதே சமூகம் ஆகட்டும், அல்லது நம்மூர் மாற்று சமூகமாகட்டும் பெண்ணை மாமீயார் வீட்டுக்குத்தானே அனுப்பி வைக்கிறார்கள் வீடு எனும் பெரும் சீதனச்சுமை உலகில் ஒரு சதவிகிதம் கூட எங்கும் காணக்கிடைக்காது. வீடு எனும் சீதணம் எங்களுக்கு வேண்டாம் என்று எப்பொழுது மாப்பிள்ளை வீட்டார் சொல்வார்களோ அப்பொழுதுதான் அயல் நாட்டு சம்பாத்தியம் கட்டாயம் இல்லை என்றாகும்.
சிலர் கேட்கலாம் அயல் நாட்டு சம்பாத்தியத்தில்தானே ஆடம்பர வாழ்வும் அழகிய வீடும் விதவிதமாய் உணவும் கிடைக்கிறது இந்த உண்மையை ஏற்பீர்களா என்பீர்கள் மறுப்பதற்கில்லை தூக்கத்தை விற்று தலையனை வாங்கிய கதை போல இளமையை விற்று ஆடம்பரத்தை வாங்கிய கதைததான் அயலக வாழ்வும் ஆடம்பர செலவும்.
உதாரணமாக பொட்டல் காடான அமீரகத்தின் வளர்ச்சியில், அந்நாட்டு மண்ணின் மைந்தர்கள் 10 சதவீத மனிதர்கள்தான் ஈடுபட்டு இருப்பார்கள் மீதம் 90 சதவீத மக்கள் நம்மைப் போன்ற அன்னியரே! அங்கே சாதித்தவர்கள் இங்கே சாதிக்காமலா போய்விடுவீர் ? உங்கள் ஊதியத்தை அதிகம் கொடுத்து அவர்கள் நாட்டை வளப்படுத்திக்கொண்டார்கள்
உங்கள் சொந்த நாட்டிலே பாடுபட்டால் ? உங்களுக்கு கிடைக்கும் நன்மைகளை பட்டியலிடுகிறேன் கவனியுங்கள்:
1. வியாபாரம் செய்யும் இடத்திலேயே குடும்பம் இருக்கையில் குடும்பத்தில் அன்னோன்யம் அதிகம் ஏற்படும்.
2. தம் பிள்ளைகளின் செயல்பாடுகளை கூர்ந்து கவனிக்கும் நல்ல வாய்ப்பு கிட்டும்.
3. உற்றார் உறவினர்களின் பரிச்சயம் நெருக்கம் அதிகரிக்கும்.
4. நம் வருமானத்திற்கேற்ப குடும்பம் பழகிக்கொள்ளும்.
5. ஊரோடு தொழில் அமைந்தால் சமுதாய சீர்திருத்தங்களில் பங்குபெரும் நல்ல வாய்ப்பு கிட்டும்.
6. தொழுகை விஷயத்தில் ஈடுபாடு உள்ளவருக்கு தடங்கள் வராது.
7. சுற்று வட்டாரத்தில் ஏற்படும் நலவு, துக்க விஷயங்களிள் கலந்து கொள்ளும் வாய்ப்பு தவறாது.
8. உங்கள் தொழில் முன்னேற்றம் நாட்டுக்கும் நம்மை சார்ந்த தொழிலாளர்களுக்கும் நலம் பயக்கும்
9. கலாச்சார மாற்றம் எனும் ஆபத்து இல்லை.
10. கணவன் மனைவி பிரிவால் ஏற்படும் மனக்குறை இல்லாது போகும்.
11. அதனால் உண்டாகும் தவறுகள்,கெட்ட எண்ணங்கள் வர வாய்ப்பு குறைவு.
12. உங்களது நடவடிக்கைகளை பிள்ளைகளும் பிள்ளைகளின் நடவடிக்கைகளை நீங்களும் தெளிவாய் புரிந்து கெள்வீர்கள்.
13. பெற்றோர்கள் முகத்தை பார்த்து அன்போடு சிரித்தாலே இபாதத்தாகும். அந்த பாக்கியம் அனுதினமும் கிட்டும்.
வெளிநாட்டு வாழ்கையின் மேலும் நிறைய குறைபாடுகள் இருக்கின்றது என்பதை அனுபவப்பட்டவர்கள் நன்றாய் அறிவீர்கள் என்ன செய்ய இந்த பாழாய்ப்போன சமூகம் நம்மை விரட்டுகிறதே ! வலியிருந்தும் முட்டையிட்டே ஆகவேண்டிய கட்டாயம்!?
ஓர் நப்பாசை தமிழகத்திற்கு இப்பொழுதெல்லாம் வட நாட்டவர்கள் கூலி வேலைசெய்ய அதிகமாக வருகிறார்கள். இன்ஷா அல்லாஹ் அதுபோல நம் நாட்டிற்கும் அயல் நாட்டவர்கள் வேலைக்காக வரட்டும் ஸ்பான்ஷராக நாம் இருப்போம்.
சிந்தனை தரும் ஆக்கம் !
ReplyDeleteஅயலகத்தில் பணிபுரிந்து விட்டு தாயகத்தில் தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தில் வந்தவர்களும் சிறிது காலத்திற்கு பின் மீண்டும் அயலகத்திற்கு செல்லும் நிலைமை அதிகமாக இருந்து வருகிறது.
// ஓர் நப்பாசை தமிழகத்திற்க்கு இப்பொழுதெல்லாம் வட நாட்டவர்கள் கூலி வேலைசெய்ய அதிகமாக வருகிறார்கள். இன்ஷா அல்லாஹ் அதுபோல நம் நாட்டிற்க்கும் அயல் நாட்டவர்கள் வேலைக்காக வரட்டும் ஸ்பான்ஷராக நாம் இருப்போம்.//
ReplyDeleteஇறுதியில் கூறும் நப்பாசை ரியல் ஆசையாக மாறட்டும் :)
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
அருமையான ஆக்கம், மேலோட்டமாக சிந்தித்து படித்தால்.........!!??
ஆனால் படிப்போரின் மன நிலை எப்படியோ.....??!!
ஒரு மாற்றம் வராத வரைக்கும் இந்த சமுதாயம் திருந்துமா?
எனினும் திருநதியே ஆக வேண்டும்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com
Wonderful subject
ReplyDeleteConvinced method
Masha Allah very useful article
இதுபோன்ற கட்டுரைகளை 25-ஆண்டுகளுக்கு முன்னால் தந்திருந்தீர்களே ஆனல் எங்கள் வாழ்க்கையின் கால் நூற்றாண்டு
ReplyDeleteதொலைத்திருக்கம்மாட்டோம், வீடுதிரும்பிய எங்களுக்கு உண்மையாகவும் நடமாடமுடியவில்லை பொய்யாகவும் நடக்கத்தெறியவில்லை ஆனாலும் ஆடம்பரத்தை வெளியில் காட்டிக்கொண்டு உள்ளே ஆஸ்பத்திரி வைத்து வாழ்ந்துகொண்டுள்ளோம் அதில் தனித்தனி டப்பா வைத்து கலர் கலரான மாத்திரைகள் கசந்தாலும் முகத்தை சுழித்துக்கொண்டு முழுங்கி வாழ்ந்துவரும்
எங்களுக்கு அன்று மாதம் மாதம் சம்பளம் வாங்கிய எங்களுக்கு இன்று மாதம் மாதம்
மருந்து வாங்க போதவில்லை வேண்டாம் வெளிநாடு இது நமக்கும் நம் எதிர்காலத்தற்கும் செய்யும் துரோகம்.
நல்லதொரு விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் கட்டுரை.
ReplyDeleteதாங்கள் குறிப்பிட்டுள்ள அத்தனையும் உண்மை. ஆனால் இதில் யோசிக்கவேண்டியது என்னவென்றால் ஊர் அனுபவம் ஊரில் தொழில் செய்யும் விதம் ஊரின் நிலவரத்தை சரிவர அறியாத எங்களால் அங்கு வந்து என்ன செய்ய முடியும்.? அடுத்து இந்த வாழ்க்கையில் பழகிப் போன எங்களுக்கு திடீரென மாற்றிக் கொள்வதில் பல மன உளைச்சலையும் சிரமங்களையும் சந்திக்கும்படி இருக்கும்.. அடுத்து பார்ப்போமேயானால் எத்தனையோ பேர் நல்ல வசதி வாய்ப்பை பெற்றவர்கள் கூட நான் இத்தோடு முடித்துக் கொண்டு போகிறேன் என்று பந்தாவாக சொல்லிவிட்டு மீண்டும் ஒருவருடம் கழித்தோ ஆறுமாதம் கழித்தோ திரும்ப இந்தக் கிணற்றில் தான் வந்து விழுகிறார்கள். இதையெல்லாம் நினைக்கும்போது அயல் நாட்டுப் பிழைப்பையே நம்பி வாழக் கூடிய எங்களைப் போன்ற நடுத்தரவாதிகள். நிரந்தரமாக ஊரோடு வந்துவிட யோசிக்க வேண்டியதாக உள்ளது.
வெறுப்போடு, குடும்ப சூழ்நிலையில் வெளிநாட்டு வாழ்கையில் நம்மவர்கள் இருந்தாலும் தன்னை போல தன் மகனை அதே வேலைக்கு அமர்த்தும் தகப்பனை பார்த்து வேதனை பட்டுருக்கேன். அமீரகத்தில் போதிய வருமானம் பெரும் நம்மவர்கள் ஊரில் தொழில் தொடங்கலாம் என்று வந்தாலும் அதில் போதிய வருமானம் இல்லை என சொல்லி மேற்கத்திய நாட்டுக்கு போய் அங்கே கைதி போல வேலை பார்கிறார்கள் இது ஒரு வேதனையான விஷயம். படித்தவர்களும் எந்த அனுபவமும் இல்லாமல் வெளிநாட்டில் லேபராக வேலை பார்ப்பது கொடுமையிலும் கொடுமை.
ReplyDeleteபடித்தால் அடுத்தவன் கீழ் வேலை செய்து காலத்தை கடுத்துவதை விட அனுபவம் பெற்ற தொழிலை வெளி ஊரில் அல்லது வெளிமாநிலத்தில் தொடங்க வேண்டும்.
முதலில் கல்வி முறையில் மாற்றம் வேண்டும் பின்னர் இந்தியா விட்டு யாரும் லேபராக வேலை பார்க்க போக மாட்டாங்க. முட்டையிடும் கோழிக்குத்தான் அதன் வலி தெரியும் உண்மை தான், மாற்றம் காண முயற்சி எடுங்கள் , நிச்சயம் வாழ்க்கையில் மாற்றம் காணலாம்!
நல்ல ஆதங்கம் - வாழ்த்துக்கள் கோடி !
மனிதன் அளவுக்கு அதிகம் ஆசை படூவதினால் வருகிற துன்பம் என்று தான் சொல்ல வேண்டும் .இறைவன் கிருபையால் கிடைத்த அளவில்லா பாக்கியத்தை நினைத்து அல்ஹும்துளில்லாஹ் என்று மனம் அமைதி பெறுவதில் நாம் தூரமாகவே இருக்கிறோம் .
ReplyDeleteஊரில் உள்ள எத்தனயோ குடூம்பங்கள் அயல் நாடுகளை நம்பி வாழவில்லை அவரவர் வாழ்க்கை இறைவன் கிருபையால் நகர்ந்து கொண்டோ தான் இருக்கிறது .ஆசை படூவதில் இருந்து விலகி நம் சொந்தங்களோடு வாழ நம் எல்லோருக்கும் இறைவன் அருள்புரிவானாக.ஆமின்