.

Pages

Thursday, December 18, 2014

அடிப்படை வசதிகள் கோரி அரசு துவக்க பள்ளியை முற்றுகையிட்டு பூட்டு போட முயன்ற கிராம மக்கள் !

முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் கிராமத்தில் அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளி ஒன்று உள்ளது. 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் 48 மாணவர்கள் படித்து வருகிறார்கள.; இவர்களுக்கு அரசு சார்பில் நிரந்திரமாக 2 ஆசிரியைகளும், பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் 1 தற்காலிக ஆசிரியையும் உள்ளனர். பள்ளி துவங்கிய காலத்தில் இருந்து இன்று வரை தனியார் பராமரிப்பில் உள்ளத்தால் எந்த வித அடிப்படை வசதிகளும், போதிய கட்டிடங்களும் இல்லாமல் உள்ளத்தால் அப்பகுதி பெற்றோர்கள் மாணவர்களை வேறு ஊறுகளில், வேறு பள்ளிகளில் சேர்க்கும் அவலம் ஏற்பட்டு உள்ளது. இந்த பள்ளியை அரசு சார்பில் நேரடியாக நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் அரசிடம் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒப்படித்தனர.; ஆனால் தமிழக கல்வித்துறை அதற்கான எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்க வில்லை. மேலும் இந்த பள்ளியின் அங்கீகாரத்தையும் கல்வித்துறை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரத்து செய்து விட்டதாகவும,; அரசு கருணை அடிப்படையில் தான் இந்த பள்ளியை நடத்தி வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்தநிலையில் தற்பொழுது இயங்கும் இந்த பள்ளி கட்டிடமும் பழுதுதடைந்த நிலையில் சேதமாகி உள்ளத்தால் அரசு உடனடியாக இந்த பள்ளிக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரவேண்டும், உதவிபெறும் பள்ளி என்பதை மாற்றி அரசு பள்ளியாக மாற்ற வேண்டும் எனக்கோரி நேற்று நூற்றுக்கும் மேற்ப்பட்ட கிராமமக்கள் அப்பகுதியை சேர்ந்த ராஜேந்திரன், நாராயணசாமி, அன்பழகன், சந்திரசேகரன், வீராசாமி ஆகியோரது தலைமையில் பள்ளியை முற்றுகையிட்டு பள்ளிக்கு பூட்டு போட முயன்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) நெப்போலியன், சப்-இன்ஸ்பெக்டர் சாமிநாதன், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமானுஜம், வருவாய் ஆய்வாளர் முருகேசன், கிராம நிர்வாக அலுவலர் கனிமொழி, கூடுதல் தொடக்கக்கல்வி அலுவலர் ராஜமாணிக்கம் ஆகியோர் கிராமமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர.; இதில் நாளை(இன்று) திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் மதியழகன் தலைமையில் சமந்தப்பட்ட இந்த பள்ளில் நடைபெறும் அமைதி கூட்டதில் பேசி முடிவு எடுக்கப்படும் என்று அதிகாரிகள், கிராம மக்களிடம் உறுதி அளித்ததால் கிராமமக்கள் கலைந்து சென்றனர்.

இதுக்குறித்து அப்பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மற்றும் நாராயணசாமி ஆகியோர: 
'கூறுகையில் பல ஆண்டுகளாக இந்த பள்ளியின் அடிப்படை வசதிகளுக்காக போரடி வருகிறோம் கல்வித்துறை கண்டுக்கொள்ளவில்லை. இங்கு படிக்கும் மாணவர்களுக்கு பாதுகாப்புகள் இல்லை. எந்தவிதமான வசதிகளும் இல்லை, கடமைக்காக இங்கு பள்ளி நடத்த படுகிறது, பராமரிப்பு செய்பவர்கள்தான் லாபம் பார்க்கிறார்கள், இனியும் இந்த அவலம் தொடர்ந்தால் விரைவில் கிராமமக்களை ஒன்று திரட்டி பெரிய போராட்டங்கள் நடத்தப்படும் என்றனர்.


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.