.

Pages

Saturday, December 6, 2014

தஞ்சையில் PFI ன் டிசம்பர் 6 போராட்டம்: ஸ்பாட் ரிப்போர்ட் [ படங்கள் இணைப்பு ]

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக பாபரி மஸ்ஜித்தை இடித்த இடத்தில் மீண்டும் எழுப்ப வேண்டும், இடித்த குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி இன்று தஞ்சை இரயில்வே நிலையம் அருகே நீதிக்கான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தஞ்சை மாவட்ட தலைவர் ஜி.முகம்மது ஜர்ஜிஸ் தலைமை வகித்தார்.

SDTU மாநில தலைவர் முகம்மது பாருக், AIIC மாவட்ட செயலாளர் மெளலவி சாகுல் ஹமீது பைஜி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயலாளர் முஹம்மது ரசீன் ஆகியோர் கண்டன உரையை நிகழ்த்தினார்.

ஆர்பாட்டத்தின் இறுதியில்  திருவாரூர் மாவட்ட தலைவர் ஹாஜா அலாவுதீன் நன்றியுரையாற்றினார். இந்த ஆர்பாட்டத்தில் அதிரை, மதுக்கூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

களத்திலிருந்து சாஜித்

2 comments:

  1. Itulaiyuma pirivinai, Ithulayaavathu onna irunthu poraadinaa ennappa.

    ReplyDelete
  2. வந்தேறிகள் நாட்டை ஆழ சதி திட்டம்போட்டு அயோக்கியர்களால் இடிக்கப்பட்ட இறைப்பள்ளியான பாப்ரி மஸ்ஜித் தின நாள் , இந்திய ஜனநாயகத்தின் கறுப்புநாள் இன்று நாடு முழுதும் அனுசரிக்கப்படும் நேரத்தில் திருடனுக்கு தேள் கொட்டியது போல NRI பிரதமர் மௌனியாக இருக்கார், இவரு செய்த அரக்க செயல்கள் பற்றி கோர்ட் தடாலடி தீர்ப்பு சொன்னாலும் இஸ்லாமியர்கள் மனதில் கொலைவெறி பிடித்தவன் போல் தான் தோன்றுகிறார்.

    மத்தியில் ஆள்வதால் மதக்கலவரம் கட்டுக்குள் இருந்தாலும் தான் அமைப்பினர் செய்யும் அட்டூழியம் தலைவிரித்தாடுகிறது, எல்லோரும் சமஸ்கிரதம் கட்டாயம் படிக்க வேண்டும் என்று சொல்லி பரபரப்பு அடங்குவதற்குள் நாம் எல்லோரும் ராம் பிள்ளைகள் என்று மத்திய இணைஅமைச்சர் நிரஞ்சன் ஜோதி கூறியுள்ளார்,

    யாரு என்று தெரியாத இவரு ரொம்ப பப்ளிசிட்டி ஆகி எதிர்கட்சினரால் துவசம் செய்யப்பட்டுள்ளார், ஆறுமாதத்திற்குள் இப்படி என்றால் இன்னும் எப்படியோ.....?

    சர்ச்சைக்குரிய இடத்தில் ரகுபதி ராகவ ராஜாராம்' போன்ற பஜனை பாடல் பாடும் இடமாக மாறியதற்கு யாரு காரணம்? முஸ்லிம் தொழுகை மறந்ததால் வேறென்ன.....?

    இடத்தை மீட்போம் உரிமைக்காக போராடுவோம்!
    நாரே தக்பீர் அல்லாஹு அக்பர் !!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.