.

Pages

Wednesday, February 11, 2015

திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை திட்டத்தை விரைந்து தொடங்க வலியுறுத்தல்

திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை திட்டப் பணிகளை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாகை தொகுதி முன்னாள் எம்.பி. ஏ.கே.எஸ். விஜயன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:
காரைக்குடி - சென்னை வழித்தடம் தமிழகத்தின் 120 ஆண்டுகளுக்கு மேலான மிகவும் பழமையான ரயில் பாதையாகும். இந்த வழித்தடம், சென்னையில் இருந்து செங்கல்பட்டு, - விழுப்புரம், மயிலாடுதுறை - திருவாரூர் என மூன்று கட்டங்ளாக அகலப் பாதையாக மாற்றம் செய்யப்பட்டு ரயில் சேவை நடைபெற்று வருகிறது.

திருவாரூர் - திருத்துறைப்பூண்டி - முத்துப்பேட்டை - அதிராம்பட்டினம் -பட்டுக்கோட்டை - பேராவூரணி - அறந்தாங்கி - காரைக்குடி வரையிலான 148 கி.மீ. தொலைவு உள்ள மீட்டர்கேஜ் பாதையை அகல ரயில் பாதையாக மாற்ற பல முறை நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்திலும், 377-வது விதியின் படியும் பேசியதன் விளைவாக முதல் கட்டமாக ரூ. 200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கின.

பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, பா.ஜ.க. ஆட்சியில் கடந்த ரயில்வே நிதிநிலை அறிக்கையில் இத்திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படாதது இப்பகுதி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

தற்போது தமிழக முதல்வர் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்து புணிளை விரைந்து முடிக்க வேண்டுமென எழுதி உள்ள கடிதத்தில் இந்த திட்டம் பற்றி குறிப்பிடப்படாதது இப்பகுதி மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. எனவே, தமிழக முதல்வர் மத்திய அரசிடம் இத்திட்டத்தின் அவசியம் குறித்து விளக்கி இந்த திட்டத்த்துக்கு நடப்பு நிதிநிலை அறிக்கையில் போதிய நிதி ஒதுக்கீடு செய்து, திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.