பெண்
குழந்தைகள் யாருடைய மடியிலும் அமரக்கூடாது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும். மாமா, சித்தப்பா, பெரியப்பா
யாராக இருந்தாலும் சரி.
2 அல்லது 3 வயதுக்கு மேல் ஆன குழந்தைகள் முன்னிலையில் உடை
மாற்றிக் கொள்ளுவதைத் தவிர்க்க வேண்டும்.
குழந்தைகளை
யாரும் என்னுடைய கணவன் என்றோ, மனைவியென்றோ
குறிப்பிடுவதோ, மனதில்
பதிய வைப்பதோ தவறு.
குழந்தை
விளையாடப் போகும்போது உங்கள் பார்வை அவர்கள் மீது இருந்து கொண்டே இருக்கட்டும்.
மேலும் அவர்கள் என்ன விளையாடுகிறார்கள் என்பதையும் கவனித்துக் கொள்ளுங்கள்.
ஏனென்றால் குழந்தைகள் தங்களுக்குள்ளாகவே பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக
நேரிடும்.
உங்கள்
குழந்தையால் சரியாக பொருந்தியிருக்க முடியாத நபரை ஒருபோதும் சந்திக்க
அனுமதிக்காதீர்கள் அல்லது அவரிடம் அழைத்துச் செல்லாதீர்கள்.
சுறுசுறுப்பாக
இருக்கக் கூடிய ஒரு குழந்தை திடீரென்று களையிழந்துவிடும்போது பொறுமையாக அவர்களிடம்
பல கேள்விகளைக் கேட்டு அவர்களின் பிரச்சனை என்னவென்று கேட்டறிய வேண்டும்.
குழந்தைகளுக்கு
தேவையானவற்றை அவர்களுக்கு முன்பாக நாம் அறிந்து கொண்டு அவர்கள் கேட்பதற்கு முன்பாக
நாமே வாங்கிக் கொடுத்துவிட வேண்டும்.
தொலைக்காட்சி
சேனல்கள் மற்றும் இணையதளங்களில் குழந்தைகள் பார்க்க அவசியமற்ற சேனல்களை பேரண்டல்
கன்ட்ரோல் மூலம் செயலிழக்கச் செய்துவிட்டோமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது
நல்லது. மேலும், குழந்தைகள்
அடிக்கடி செல்லும் நம் நண்பர்களின் வீடுகளிலும் இதை செய்து வைக்க அறிவுருத்துவது
நல்லது.
3 மூன்று
வயது ஆனவுடனேயே குழந்தைகளுக்கு தங்கள் உடலின் அந்தரங்கப் பகுதிகளை சுத்தம் செய்ய
கற்றுக் கொடுக்க வேண்டும். உடலின் அந்தப் பகுதிகளை பிறர் யாரும் தொடுவதற்கு
அனுமதிக்கக் கூடாது என எச்சரிக்கை செய்து வைக்க வேண்டும். நீங்களும் அந்த வேலையை
செய்யக் கூடாது. ஏனென்றால், அவசியமற்ற
உதவிகளை செய்யும் போக்கு வீட்டிலிருந்துதான் தொடங்குகிறது.
சுத்தம்
சுகம் தரும், அதுபோல் உங்கள் குழந்தைகளுக்கு சுத்தம் என்றால் என்ன என்பத்தை சிறுக
சிறுக கற்றுக் கொடுங்கள்.
குழந்தையை அச்சுறுத்தக்
கூடிய அல்லது அவர்களின் மனநிலையை பாதிக்கக் கூடியவற்றை முற்றாகத் தவிர்க்கவும்.
இதில் இசை, படங்கள், நண்பர்கள்
மற்றும் குடும்பங்களும் அடங்கும்.
மற்றவர்களுடன்
ஒப்பிடும்போது உங்கள் குழந்தையின் தனித்துவத்துத்தை அல்லது தனித் திறமையைப்
புரிந்து கொள்ளச் செய்யுங்கள்.
குழந்தை
ஒருவரைப் பற்றி ஒருமுறை குற்றச்சாற்றைக் கூறினாலே, அதை
கவனிக்கத் தொடங்குங்கள். கேட்டுவிட்டு அமைதியாக இருக்க வேண்டாம். நீங்கள் அதற்காக
நடவடிக்கை எடுத்தீர்கள் என்பதை குழந்தைக்கு உணரச் செய்யுங்கள்.
குழந்தைகளை
அருகில் வைத்துக் கொண்டு மின் சாதங்களை இயக்கவோ, சரி செய்யவோ முயல வேண்டாம்.
பள்ளி
வளாகங்கள், தெரு ஓரங்கள், பெட்டிக் கடைகள், வீதி வீதியாக வரும் வியாபாரிகள்,
இவர்களிடம் குழந்தைகளை கவரும் வண்ணம் இனிப்பு பண்டங்கள் விற்கப்படுகின்றன. அவைகளை
உங்கள் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்க வேண்டாம், மேலும் உங்கள் குழந்தைகளை அதை
நாடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
சிறுவயது
முதல் குழந்தைகளுக்கு அடக்கம், மரியாதை, பண்பு, போன்ற நற்செயல்களை கற்றுக் கொடுங்கள்,
ஞாபகம்
இருக்கட்டும்; அது நாம் பெற்றோராக இருந்தாலும் சரி அல்லது பெற்றோராகப்
போகிறவராக இருந்தாலும் சரி!
ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையாது.
மேலே சொல்லப்பட்ட
அனைத்தும் கேட்பதற்கு நல்லாத்தாங்க இருக்குது, ஆனா! எங்க பிள்ளைங்க ரொம்ப நல்ல
பிள்ளைங்க!! அதுகளா தானாக வெளியில் போகுதுங்க மீண்டும் தானாக வீட்டுக்குள்
வந்துடுதுங்க, எல்லோரு கிட்டேயும் சகஜமா பழகுதுங்க, தானாக வளருதுங்க, தானாக
சுத்தப்படுத்திக் கொள்ளுதுங்க, வேறு என்னங்க எங்களுக்கு கவலை.
எங்களுக்கு டெலிகிராமுலே
மெசேஜ் படித்து, வாட்ஸ் அப்பிலே மெசேஜ் கொடுத்து அப்டேட் செய்யவே நேரம் இல்லீங்க, அதிலும்
இப்போ இண்டர்நெட்டிலே புதுசு புதுசா என்னனமோ வருதுங்களா, அதை நோன்டுரதுக்கே நேரம் சுத்தமா
பத்தலேங்க.
எங்க பிள்ளைங்க
ரொம்ப நல்ல பிள்ளைங்க, அப்படி தப்பு தண்டான்னு ஏதும் நடக்காதுங்க. எங்க பிள்ளையைக்
குறித்து அப்படி செய்யனும் இப்படி செய்யனும்னு பட்டியல் எல்லாம் போட்டு எங்களை
குழப்பாதீங்க. நீங்க உங்க வேலையைப் போய் பாருங்க.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. (மர்ஹூம்) கோ.முஹம்மது அலியார்.
Human
Rights and Consumer Rights Included.
Thanjavur
District Organizer. Adirampattinam-614701.
kmajamalmohamed@gmail.com
தரமான அறிவுரை. தகுமானோர்கள் மனதில் பதித்திடுதல் வேண்டும். தவறின் தட்டுத்தடுமாறியே சமூகம் சென்றுவிடும். காப்பது கடமை. மனித உரிமைக் காவலருக்கு நன்றிகள் பல.
ReplyDelete
ReplyDeleteகுழந்தையை அச்சுறுத்தக் கூடிய அல்லது அவர்களின் மனநிலையை பாதிக்கக் கூடியவற்றை முற்றாகத் தவிர்க்கவும். இதில் இசை, படங்கள், நண்பர்கள் மற்றும் குடும்பங்களும் அடங்கும். தரமான அறிவுரை. தகுமானோர்கள் மனதில் பதித்திடுதல் வேண்டும்.