.

Pages

Wednesday, February 11, 2015

பட்டுக்கோட்டை அருகே மளிகை கடை வியாபாரி கொலை செய்து உடல் தென்னந்தோப்பில் புதைப்பு: கொலையாளி கைது !

சேதுபாவாசத்திரம் அருகே உள்ள கட்டுமாவடி முஸ்லிம் தெருவை சேர்ந்தவர் முகமது பாருக். இவரது மகன் பிஸ்மில்லாகான் (27). இவரது அண்ணன் சுபைதர் பாட்ஷா (29). இவர்கள் 2 பேரும் அய்யம்பேட்டை பசுபதி கோவில் அருகே மளிகை கடை நடத்தி வருகின்றனர்.

அதிரை அடுத்து சேதுபாவாசத்திரம் அருகே உள்ள செந்தலைவயலில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தங்கப்பொண்ணுவுடன் (24) பிஸ்மில்லாகானுக்கு திருமணம் நடந்தது. இந்நிலையில் கடந்த 3ம்தேதி செந்தலை வயலில் உள்ள மாமியார் வீட்டுக்கு பிஸ்மில்லாகான் சென்றார். பின்னர் அங்கிருந்து கடைக்கு செல்வதாக கூறி புறப்பட்டு சென்றார். ஆனால் அவர் கடைக்கு செல்லவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

இதுபற்றி சேதுபாவா சத்திரம் போலீசில் சுபைதர் பாட்ஷா கடந்த 4–ந்தேதி புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிந்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பட்டுக்கோட்டை கரம்பயத்தை சேர்ந்த பால்ராஜை (55) பிடித்து சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரித்தனர். இதில் பிஸ்மில்லாகானின் கழுத்தை நெரிந்து கொலை செய்ததாகவும், பின்னர் தென்னந்தோப்பில் அவரது உடலை புதைத்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்று பிஸ்மில்லாகானின் உடலை போலீசார் மீட்டனர். மேலும் பட்டுக்கோட்டை தாசில்தார் சேதுராமன் முன்னிலையில் பிஸ்மில்லாகானின் உடலை பிரேத பரிசோதனை செய்து அவர்களது உறவினர்களிடம் ஒப்படைத்த போலீசார் பால்ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.