இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் தஞ்சை மாவட்ட பொருளாளரும், கடந்த மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் தஞ்சை தொகுதியில் போட்டியிடப்போவதாக பரபரப்பாக பேசப்பட்டவருமாகிய உமர் தம்பி மரைக்கா நம்மிடம் கூறியதாவது...
'இரண்டாவது முறையாக டெல்லி முதலமைச்சாராக பதவியேற்க உள்ள கெஜ்ரிவாலுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்திய ஜனநாயகத்தில் இதுவரை நிகழாத சாதனை வெற்றி. வெற்றிபெற செய்த டெல்லி மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தஞ்சை மாவட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியை பலப்படுத்தப்படும் முயற்சியில் ஈடுபட இருக்கிறேன். உறுப்பினர்கள் சேர்க்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படும்' என்றார்.

இந்த அதிராம்படத்து அன்னா கசாரேவை யாருப்பா எழுப்பிவுட்டது?
ReplyDeleteஊழலுக்கு எதிராக துவங்கிய இந்த ஆண்டின் துவக்கம், தில்லியை தாக்கி இந்தியாவின் எட்டு திக்கும் பரவட்டும்,
ReplyDeleteஅறிவியல் தந்த தகவல் தொழில்நுட்பம் கட்சி கறை படிந்த மக்கிய மூலைகளை சிந்திக்க தூண்டட்டும். தலை நிமிர்த்த தலைநகர்; இந்தியாவின் தலை எழுத்தை மாற்றட்டும். கொடியேந்திய கைகளும் கோஷமிட்ட நாவுகளும் மாற்றம் கொள்ளட்டும். விலை இல்லா பொருளுக்கு விலை போன வாக்குகள் மாய்ந்து போகட்டும். அறியா சனமே கூனிய உன் முதுகு ஏணி அல்ல அரசியல்வாதிகள் ஆரியனை ஏற.
நிமிர்ந்து நிற்க ஒரு துளி சிந்தனை போதும் சிந்திப்பதால் தேடுதலும், தேடுதலால் நம் தேவைகளும் நிறைவேறும்.
உலகறிய பகுத்தறிவை கையில் எடுப்போம் ஊழல் எனும் இருள் விலக அதுவே நமது வழிகாட்டி.
வாழ்த்துக்கள் கெஜ்ரிவால் ஜீ.
This comment has been removed by the author.
ReplyDelete