.

Pages

Saturday, February 7, 2015

பேரிடர் மேலாண்மை திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு !

அதிரை அருகே உள்ள ஏரிபுறக்கரை கிராமத்தில் பேரிடர் மேலாண்மை திறன் குறித்த மேம்பாடு பயிற்சி முகாம் மற்றும் செயல் விளக்கம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தஞ்சை மாவட்ட ஆட்சியர் திரு. சுப்பையன் தலைமை வகித்து "பேரிடர் காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள், பேரிடர் மேலாண்மை பயிற்சியின் முக்கியத்துவம்' குறித்து பேசினார்.

முன்னதாக தஞ்சை மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி செயலாளர்
திருமதி. வசந்தா கோவிந்தராசன் வரவேற்புரை ஆற்றினார்.

கோட்டாச்சியர் திரு. அரங்கநாதன், தாசில்தார் திரு. சேதுராமன், மண்டல துணை வட்டாட்சியர்கள் திருமதி தரணிகா, திரு கோவிந்தராஜ், திரு. பாஸ்கரன், பேராவூரணி துணை வட்டாட்சியர் திருமதி. மாணிக்கவள்ளி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

பேரிடர்கால ஒத்திகையை பட்டுக்கோட்டை தீயணைப்பு துறையினர், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, பாரதிதாசன் பல்கலைகழக பேராசிரியர்கள், மருத்துவர் எட்வின், பயிற்றுநர் துரை மாணிக்கம், சுரேஷ் ஆகியோர் வழங்கினர். பயிற்சி முகாமில், அரசு துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், இந்தியன் ரெட் கிராஸ் உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.