பேராவூரணி பிப்.09
தமிழகத்திலேயே தென்னை மற்றும் அதனை சார்ந்த உபதொழில்களுக்கு பெயர் பெற்றது தஞ்சை மாவட்டம் பேராவூரணி பகுதியாகும்.
தேங்காய் உற்பத்தி, கொப்பரை தயாரித்தல், கயறு தயாரித்தல், தென்னை மட்டை கழிவு பஞ்சிலிருந்து கேக் தயாரித்து ஏற்றுமதி செய்தல் என பல்வேறு துணைத் தொழில்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் இப்பகுதியில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை பெற்று வருகின்றனர்.
ஆனால் கடந்த சில மாதங்களாகவே தென்னை நார், தென்னை உற்பத்தி பொருட்கள் தயாரிப்போர், தென்னை மட்டையை ஏற்றி செல்லும் லாரி உரிமையாளர்கள் என அனைத்து தரப்பினரும், தொழிலில் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து ஆலோசனை நடத்தி தொழில் செய்வதில் உள்ள இடர்பாடுகளை களைந்து, தேக்க நிலை ஏற்படாமல் இருக்க, தென்னை சார்ந்த தொழில் செய்வோர் கூட்டமைப்பு ஏற்படுத்தி உள்ளனர். இதன் அவசர ஆலோசனை கூட்டம் எதிர்வரும் பிப்.12 ந்தேதி திங்கட்கிழமை காலை 11 மணிக்கு பேராவூரணி டாக்டர் ஜே.சி.குமரப்பா பள்ளி எதிரில், தனம் திருமண மகாலில் நடைபெறவுள்ளது. இத்தொழில் சார்ந்த பேராவூரணி, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, ஆலங்குடி, அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் இதில் பங்கேற்கின்றனர். இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை சங்க நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.