பேராவூரணி பிப்.09
ஒருங்கிணைந்து செயல்பட்டால் வெற்றி நமதே என முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக தஞ்சை மாவட்ட துணைச் செயலாளருமான கா.அண்ணாதுரை பேசினார்.
பேராவூரணி ஒன்றிய திமுக செயல்வீரர்கள் கூட்டம் வியாழன் அன்று பேராவூரணி ஜே.சி.குமரப்பா பள்ளி எதிரில் உள்ள தனம் மஹாலில் ஒன்றிய அவைத்தலைவர் ஆர்.நீலகண்டன் தலைமையில் நடைபெற்றது. ஒன்றியக் கழக பொறுப்பாளர் க.அன்பழகன் முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக தஞ்சை மாவட்ட துணைச் செயலாளருமான கா.அண்ணாதுரை பேசுகையில்,
வரும் பிப் 16, 17 ஆகிய தேதிகளில் ஒன்றியத்தில் உள்ள 26 ஊராட்சிகளிலும், திமுக ஆய்வு கமிட்டி வருகை தரவுள்ளது. ஊராட்சி கழக செயலாளர்கள் கூட்டங்களில் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம். 21 ந்தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் தளபதியை சந்திக்க செல்லும்போது அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். இன்றைய அரசியல் சூழல் நமக்கு சாதகமாக உள்ளது. கருத்து வேறுபாடுகளை களைந்து அனைவரும் ஒற்றுமையோடு செயல்பட்டால் வெற்றி நமதே என்பதை மறந்து விடக்கூடாது. வாக்காளர் பட்டியலில் நமது ஆதரவாளர்கள் பெயர்களை சேர்ப்பதில் முனைப்புடன் செயல்படவேண்டும். கட்சி வளர்ச்சி மட்டுமே நமது குறிக்கோளாக கொண்டு செயல்படவேண்டும்" இவ்வாறு பேசினார்.
கூட்டத்தில் முன்னாள் பேரூராட்சி பெருந்தலைவர் என்.அசோக்குமார், முன்னாள் மாவட்ட துணைச்செயலாளர் என்.செல்வராஜ், நகரச்செயலாளர் தனம் கோ.நீலகண்டன், மாநில மீனவரணி துணை அமைப்பாளர் பெருமகளூர் ஜெயப்பிரகாஷ், சேதுபாவாசத்திரம் தெற்கு ஒன்றியச்செயலாளர் ரவிச்சந்திரன், முன்னாள் ஒன்றியச்செயலாளர் சுப.சேகர், தலைமைக்கழக பேச்சாளர் அப்துல்மஜீத் மற்றும் ஒன்றிய, நகர, கிளைக்கழக நிர்வாகிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மார்ச் 1 இளைஞர் எழுச்சி நாள் விழா, மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா, வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் மற்றும் கழக வளர்ச்சி பணிகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.