.

Pages

Thursday, February 8, 2018

ஏர் இந்தியா விமானங்கள் சவுதி வான்வெளி ஊடாக இஸ்ரேல் செல்ல அனுமதி மறுப்பு!

அதிரை நியூஸ்: பிப்.08
ஏர் இந்தியா விமானங்கள் சவுதி அரேபியா வான்வெளி ஊடாக இஸ்ரேல் செல்ல அனுமதி மறுப்பு

ஏர் இந்தியா விமானங்கள் டெல்லியிலிருந்து ஆக்கிரமிப்பு இஸ்ரேலின் டெல்அவிவ் நகருக்கு வாரத்திற்கு 3 விமானங்களை எதிர்வரும் மார்ச் மாதம் முதல் இயக்கத் திட்டமிட்டுள்ளது. இதற்காக சவுதி அரேபியாவின் வான்வெளி வழியாக பறக்க ஏர் இந்தியா நிறுவனத்தால் அனுமதி கேட்கப்பட்டிருந்த நிலையில் இதற்கான அனுமதியை சவுதி தந்துவிட்டதாகவும் இன்னொருபுறம் இஸ்ரேல் பொய்களை கட்டவிழ்த்துவிட்டது.

சவுதி அரேபியா ஒருபோதும் இஸ்ரேலை அங்கீகரித்ததில்லை என்பதுடன் கடந்த 70 ஆண்டுகளாக சவுதியின் வானையோ, மண்ணையோ இஸ்ரேலிய நலன்களுக்காக பயன்படுத்தியதும் இல்லை, பிறரையும் பயன்படுத்த அனுமதி வழங்கியதும் இல்லை என்பதால் அனுமதி தர இயலாது என கைவிரித்தது என்று சவுதி விமான போக்குவரத்து அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

ஏற்கனவே ஆக்கிரமிப்பு இஸ்ரேலிலிருந்து வாரத்திற்கு 4 முறை எத்தியோப்பியா வழியாக சுற்றிக் கொண்டு மும்பைக்கு 7 மணிநேர பயணத்தில் இஸ்ரேலிய விமானங்கள் வந்து செல்கின்றன. இதுவே சவுதி வான்வெளியை பயன்படுத்திச் சென்றால் 5 மணிநேரத்தில் இலக்கை அடையலாம்.

இந்நிலையில் இஸ்ரேல் இந்தத் திட்டத்திற்காக 750,000 யூரோக்களை ஏர் இந்தியா நிறுவனத்திற்கு வழங்கி இப்புதிய விண் தடத்தில் விமான சேவையை துவக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளதன் அடிப்படையிலேயே ஏர் இந்தியா நிறுவனம் சவுதியிடம் அனுமதி கேட்டது, இதன் மூலம் 2 மணி நேரங்களை மிச்சப்படுத்தலாமாம். ஏர் இந்தியா பெயரில் இஸ்ரேலிய விமானங்கள் சவுதிக்கு மேல் பறக்கவிடும் முயற்சி முறியடிக்கப்பட்டது.

Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.