.

Pages

Friday, February 9, 2018

பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் 'MY STAMP' சிறப்புக் கவுண்டர் தொடக்கம்!

பட்டுக்கோட்டை, பிப்.9:
பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் 'எனது அஞ்சல் தலை' (மை ஸ்டாம்ப்)  சிறப்புக் கவுண்டர் தொடக்க விழா புதன்கிழமை மாலை நடைபெற்றது. பட்டுக்கோட்டை பைவ் ஸ்டார் மேல்நிலைப் பள்ளி முதல்வர் டி.லதா குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பட்டுக்கோட்டை கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் எஸ்.பஞ்சாபகேசன் பேசியது:
'எனது அஞ்சல் தலை' பெற ரூ.300 செலுத்தி பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் மற்றும் அடையாளச் சான்றுடன் விண்ணப்பித்து, பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் கொடுத்து அன்றே தங்கள் புகைப்படத்துடன் கூடிய அஞ்சல் தலைகளைப் பெற்றுக் கொள்ளலாம். இதை தபாலில் ஒட்டி அனுப்பவும் பயன்படுத்தலாம். இது தவிர, தங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கும் அவர்களது புகைப்படத்துடன் கூடிய அஞ்சல் தலையை பரிசாகவும் அளிக்கலாம். தற்போது பொதுமக்கள் விரைவாக பெற்றுச் செல்வதற்காக மை ஸ்டாம்ப் ஷீட்  பிரிண்ட் செய்யும் வசதி பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகத்திலேயே செய்யப்பட்டுள்ளது.

மேலும், பட்டுக்கோட்டை கோட்டத்திலுள்ள அனைத்து தலைமை மற்றும் துணை அஞ்சலகங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வெளிநாடுகளுக்கு குறைந்த செலவில் தபால்களை அனுப்பும் வசதியை பொதுமக்கள், வர்த்தக நிறுவனங்கள், வங்கிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

பட்டுக்கோட்டை மேற்கு உள்கோட்ட அஞ்சல் ஆய்வாளர் பிரேம் ஆனந்த், கிழக்கு உள்கோட்ட அஞ்சல் ஆய்வாளர் கே.சிவசங்கரி ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.   பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலக அதிகாரி டி.உமா வரவேற்றார். கோட்ட துணை அஞ்சல் கண்காணிப்பாளர் கே.கந்தசாமி நன்றி கூறினார். ஏற்பாடுகளை கணினி மேலாளர் ராஜேந்திரன், வணிக விரிவாக்க அலுவலர் ஜெரால்டு சகாயராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.