தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கான மண்டல வேளாண் ஆய்வுக்கூட்டம் வேளாண்துறை இயக்குநர் தட்சிணாமூர்த்தி அவர்கள் தலைமையில் இன்று (09.02.2018) நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கான மண்டல வேளாண் ஆய்வுக்கூட்டம் வேளாண்துறை இயக்குநர் தட்சிணாமூர்த்தி தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை முன்னிலையில் இன்று (09.02.2018) நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டத்தின் உணவு தானிய உற்பத்தி இலக்கான 8.13 லட்சம் மெட்ரிக் டன்கள், திருவாரூர் மாவட்ட உணவு தானிய உற்பத்தி இலக்கான 10.54 லட்சம் மெட்ரிக் டன்கள், நாகப்பட்டினம் மாவட்ட உணவு தானிய உற்பத்தி இலக்கான 5.29 லட்சம் மெட்ரிக் டன்கள் மற்றும் கடலூர் மாவட்ட உணவு தானிய உற்பத்தி இலக்கான 8.18 மெட்ரிக் டன் கள் ஆகியவற்றினை சாதனை அடைந்திட வேளாண் துறை அலுவலர்கள் உரிய தொழில்நுட்பங்களை வழங்கிட கேட்டுக்கொண்டார்.
ஆய்வின்போது பயறுவகை உற்பத்தியை அதிகப்படுத்திட ஊடுபயிர், கலப்பு பயிர் மற்றும் வரப்பு பயிராக உளுந்து மற்றும் பச்சை பயறு சாகுபடி செய்திடவும் குறைந்த பரப்பில் அதிக மகசூல் பெற தொழில்நுட்பங்களை வழங்கவும் கேட்டுக்கொண்டார். நெல் சாகுபடி செய்ய இயலாத இடங்களில் எண்ணெய் வித்து பயிர்களான எள், நிலக்கடலை மற்றும் ஆமணக்கு பயிர்களை பயிரிடவும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடவும் கேட்டுக்கொண்டார். தண்ணீர் தேவையினை குறைத்து குறைந்த அளவு நீரில் உளுந்து, பச்சைப்பயறு, கரும்பு, எண்ணெய்ப்பனை மற்றும் தென்னை போன்ற பயிர்களை நுண்ணீர் பாசனத்தை பயன்படுத்;தி சாகுபடி செய்திட கேட்டுக்கொண்டார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் கூடுதல் வேளாண்மை இயக்குநர் ஆர்.கிருஷ்ணகுமார், ஸ்டாமின் இயக்குநர் சங்கரலிங்கம், வேளாண் இயக்குநரக வேளாண் துணை இயக்குநர்கள் சங்கர், ஜார்ஜ் மேமன் மற்றும் தேசிய உணவு பாதுகாப்பு திட்ட ஆலோசகர்கள் தனசேகரன் மற்றும் கோவிந்தன், தஞ்சாவூர், திருவாரூர், நாகை மற்றும் கடலூர் மாவட்ட வேளாண்மை துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.