.

Pages

Monday, April 30, 2018

அல் அமீன் ஜாமிஆ பள்ளிவாசல் அருகே தேங்கிக் காணப்படும் கழிவுகளை அகற்ற நாம் தமிழர் கட்சியினர் கோரிக்கை!

அதிராம்பட்டினம், ஏப்.30
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள கட்டண கழிப்பறை செப்டிங் டாங்கிலிருந்து கழிவுகள் வெளியேறி அருகில் உள்ள அல் அமீன் ஜாமிஆ பள்ளிவாசல் அருகே தேங்கிக் காணப்படுகிறது. இப்பகுதியில் துர்நாற்றம் வீசிவருவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்தக் கோரி நாம் தமிழர் கட்சி சார்பில், பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி துணைத் தலைவர் முகமது தம்பி, பசீர் அகமது, முகமது பாசித், அஜ்மல் ஆகியோர் அதிராம்பட்டினம் பேரூர் துப்புரவுப்பணி மேற்பார்வையாளர் முத்துக்குமாரிடம் திங்கட்கிழமை மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்டு கழிவுகளை அகற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக மனுதாரர்களிடம் உறுதி அளித்தாராம்.

செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)

அமீரகத்தில் மே மாதத்திற்கான சில்லறை பெட்ரோல் விலை உயர்வு!

அதிரை நியூஸ்: ஏப்.30
அமீரகத்தில் மாதந்தோறும் கச்சா எண்ணெயின் சர்வதேச சந்தை விலைக்கு ஏற்ப மாற்றியமைக்கப்படும் சில்லறை பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயர்ந்துள்ளன. கடந்த மாதம் பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்பாடதிருந்த நிலையில் இந்த மாதம் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.

அடைப்புக்குறிக்குள் ஏப்ரல் மாத பெட்ரோல் விலை ஒப்பீட்டுக்காக,
1. சூப்பர் 98 - 2.49 திர்ஹம் (2.33 திர்ஹம்) லிட்டருக்கு 16 காசுகள் உயர்வு
2. ஸ்பெஷல் 95 - 2.37 திர்ஹம் (2.22 திர்ஹம்) லிட்டருக்கு 15 காசுகள் உயர்வு
3. டீசல் - 2.56 திர்ஹம் (2.43 திர்ஹம்) லிட்டருக்கு 13 காசுகள் உயர்வு

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

தஞ்சை மாவட்டத்தில் சூரிய மின்சக்தி உற்பத்தி சாதனம் பொருத்த 30 சதவீத மானியம்!

சூரிய மின்சக்தி உற்பத்தி செய்யும் சாதனத்தினை கட்டிடங்களின்
மேற்கூறையில் நிறுவிட 30 சதவீத மானியம் வழங்கப்படுகிறது என தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தகவல் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் (TEDA) மூலம், மரபுசாரா எரிசக்தியை மேம்படுத்தும்  திட்டங்கள் மாவட்டம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்பொழுது மத்திய அரசு. சூரிய மின்சக்தி உற்பத்தி செய்யும் சாதனத்தினை கட்டிடங்களின் மேற்கூறையில் நிறுவிட 30 சதவீத மானியம் அறிவித்துள்ளது.

இம்மானியம் பெறுவதற்கு தனியார் பள்ளிகள், கல்லுரிகள், சமுதாய கட்டிடங்கள், அரசு சாரா அமைப்பின் மூலம் நிர்வகிக்கப்படும் மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள், தொண்டு நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும் கல்விக்கான பணிமனைகள், தனிநபர் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் போன்றவை தகுதியானவை ஆகும்,

சூரிய மின் உற்பத்தி சாதனம் மு்லம் உற்பத்தி செய்யப்படும்  மின்சாரத்தை. சு{hpய ஒளி சாதனத்தை பயன்படுத்துபவர்கள்.  பயன்படுத்தியது  போக மீதமுள்ள  மின்சாரம் மின்வாரியத்திற்கு நெட் மீட்டர் மூலம் அனுப்பபடுவதால் மின் கட்டண செலவினம் பெருமளவில் குறைகிறது,

இத்திட்டத்தின் கீழ் ஒரு பயனாளி தங்களுடைய மின்சார தேவைக்கேற்ப ஒரு கிலோ வாட்  முதல்  500 கிலோ வாட்  வரை  சூரிய மின் உற்பத்தி சாதனத்தை அமைக்கலாம். ஒரு கிலோ உற்பத்திக்கு  தமிழக அரசினால் நிர்ணயிக்கப்பட்ட தொகை ரூ.60,000-/ ஆகும்,  இதில் மத்திய அரசின் மானியம் ரூ.18,000-/ பயனாளி சூரிய மின் உற்பத்தி சாதனத்தை வாங்க செலவிட வேண்டிய தொகை ரூ.42,000-/ மட்டுமே, சூரிய சக்தி மின் உற்பத்தி சாதனத்தை  முழுமையாக 25 ஆண்டுகள் பயன்படுத்தலாம்.

இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்பும் தனிநபர் அல்லது நிறுவனம் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2டூவது தளத்தில் இயங்கி வரும் மாவட்ட ஊரக வளர்ச்சி  முகமையில்  உள்ள TEDA பிரிவில் உரிய ஆலோசனைகள் பெற்றிடலாம்.

மேலும், அலுவலக வேலை நாட்களில்  அப்பிhpவில்  உதவி பொறியாளரை  நேரடியாகவோ அல்லது 7708064632, 7708064720, 7708064628  ஆகிய செல்போன்  எண்களை தொடர்பு கொண்டும் மற்றும்  வதே்வநனய.in மின்னஞ்சல்  மூலமாகவோ  சூரிய மின்  உற்பத்தி சாதனம் மற்றும் மானியம் தொடர்பான  அனைத்து தகவல்களையும்  பெறலாம்.

எனவே விருப்பம் உள்ள அனைவரும் விண்ணப்பித்து பயன்பெறும்படி  கேட்டுக்கொள்ளப்படுகிறது.  இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

ஒரத்தநாட்டில் மே 5 ந் தேதி வேலை வாய்ப்பு முகாம்!

வருகின்ற 05.05.2018 அன்று ஒரத்தநாட்டில் பெண்கள்
உயர்நிலைப் பள்ளியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தகவல் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் இணைந்து நடத்தும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 05.05.2018 அன்று ஒரத்தநாடு அரசினர் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரை நடைபெற உள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு, வேலைநாடுநர்களுக்கு பணிவாய்ப்புகளை அளிக்கவுள்ளனர்.

மேலும் இம்முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் ((TAMILNADU SKILL DEVELOPMENT CORPORTATION) இலவச பயிற்சி வகுப்பிற்கான பதிவுகளையும், தன்னார்வ பயிலும் வட்டத்தின் கீழ் SSC, TNPSC, IBPS, RRB போன்ற போட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பிற்கான பதிவுகள், அயல்நாட்டு வேலைவாய்ப்பிற்கான பதிவுகள் (OVERSEAS MANPOWER CORPORATION) மற்றும் வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவதற்கான பதிவுகள் ஆகியவை மேற்கொள்ளப்பட உள்ளன. இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள வேலைநாடுநர்கள், தங்களது சுய விவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை,
முன் அனுபவம் ஏதும் இருப்பின் அதற்கான சான்றிதழ் நகல்களுடன் கலந்து கொண்டு பயன்பெற மாவட்ட ஆட்சியர் அவர்களால் அறிவிக்கப்படுகிறது.

மேலும் இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனங்கள், தங்கள் நிறுவனங்களுக்கு தேவைப்படும் பணியாளர்களின் எண்ணிக்கை, எதிர்பார்க்கும் கல்வித்தகுதி மற்றும் அளிக்க இருக்கும் ஊதியம் போன்ற விவரத்தை addeotnj@gmaill.com, dddeotnj@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கவும். மேலும் விவரங்களுக்கு 04362-237037  என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.  இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

அதிராம்பட்டினம் கூட்டுறவு சங்கத் தேர்தல் வேட்பு மனு ~ அதிகாரி வராததால் திமுகவினர் காத்திருப்பு போராட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஏப்.30
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் கூட்டுறவு சங்கத்தின் 11 புதிய நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்வதற்காக தேர்தலில் போட்டியிட இன்று (ஏப்.30) திங்கட்கிழமை வேட்பு மனுதாக்கல் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, திமுக அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் இராம.குணசேகரன் தலைமையில், திமுகவினர் 11 பேர் வேட்புமனு தாக்கல் செய்ய விண்ணப்ப மனுவைப் பெற கூட்டுறவு சங்கத்திற்கு திங்கட்கிழமை காலை சென்றனர். ஆனால், கூட்டுறவு சங்க தேர்தலுக்கான அலுவலர் சங்கத்திற்கு வராததால், ஏமாற்றம் அடைந்தனர். பின்னர், கூட்டுறவு சங்கத்தின் உள்ளே அமர்ந்து சுமார் 30 நிமிடங்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)
 
 
 

மரண அறிவிப்பு ~ வஜிஹா அம்மாள் (வயது 78)

அதிரை நியூஸ்: ஏப்.30
அதிராம்பட்டினம், மேலத்தெரு கா.நெ குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம் கா.நெ முகமது சாலிகு அவர்களின் மகளும், மர்ஹூம் கா.செ.அ முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மனைவியும், மர்ஹூம் கா.நெ நெய்னா முகமது, மர்ஹூம் கா.நெ அகமது ஜலாலுதீன், மர்ஹூம் கா.நெ அப்துல் வஹாப், மர்ஹூம் கா.நெ அபுல் ஹசன், மர்ஹூம் கா.நெ அப்துல் மஜீது, மர்ஹூம் கா.நெ அப்துல் ஜப்பார், கா.நெ சாகுல் ஹமீது ஆகியோரின் சகோதரியும், எம்.எம் தீன் முகமது, எம்.லியாகத் அலி, எஸ். அலியுல் ஹவ்வாஸ் ஆகியோரின் மாமியாரும், கா.செ.அ அப்துல் மஜீது அவர்களின் தாயாருமாகிய வஜிஹா அம்மாள் (வயது 78) அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (30-04-2018) மாலை 5 மணியளவில் பெரிய  ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

திருக்குர்ஆன் மாநாடு ~ பெண்களுக்கான பேச்சுப் போட்டி நாளை (மே.1 ந் தேதி) நடைபெறும்!

அதிராம்பட்டினம், ஏப்.30
தஞ்சாவூர் மாவட்டம், அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் வெள்ளி விழா ஆண்டின், 15-வது திருக்குர்ஆன் மாநாடு, அதிராம்பட்டினம் புதுமனைத்தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் அருகே உள்ள வளாகத்தில், எதிர்வரும் மே 4, 5, 6 ஆகிய 3 தினங்கள் நடைபெற உள்ளது.

இதையொட்டி நடைபெறும் போட்டிகளில் ஒன்றாகிய பெண்களுக்கான (15 வயதுக்கு உட்பட்ட முதல்நிலை, 16-20 வயதுக்கு உட்பட்ட மேல்நிலை) பேச்சுப் போட்டியில் முன்பதிவு செய்துள்ள மாணவிகளுக்கு நாளை மே.1 ந் தேதி காலை 9 மணிக்கு அதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் போட்டி நடைபெறும் என அதிரை பைத்துல்மால் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டுக்கோட்டை ~ காரைக்குடி ரயில் போக்குவரத்தை உடனடியாக தொடங்க கோரிக்கை!

பட்டுக்கோட்டை, ஏப். 30
பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் 29.04.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று 5.00 மணியளவில் பட்டுக்கோட்டை ஹைஸ்கூல் ரோடு நிலா ஸ்கூலில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு சங்க தலைவர் என்.ஜெயராமன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கே.லட்சுமிகாந்தன் முன்னிலை வகித்தார். துணை செயலாளர் ஜே.பிரின்ஸ் விஜயகுமார் வரவேற்புரை நிகழ்த்தினார்.செயலாளர் வ. விவேகானந்தம் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் பி. சுந்தரராஜூலு வரவு செலவு அறிக்கையை தாக்கல் செய்தார்.

கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மக்களின் வரிப்பணத்தில், பல கோடிக்கான ரூபாய் செலவில் 73 கி. மீட்டர் நீளம் கொண்ட அகல ரயில் பாதை காரைக்குடியிலிருந்து பட்டுக்கோட்டைக்கு அமைக்கப்பட்டுள்ளது. மார்ச் 30 ந்தேதி ஒருநாள் மட்டும் பயண சீட்டு வழங்கப்பட்டு காரைக்குடியிலிருந்து பட்டுக்கோட்டைக்கும், மீண்டும்
பட்டுக்கோட்டையிலிருந்து காரைக்குடிக்கும் இயக்கப்பட்டது.

தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் இப்பாதையில் இரயில் சேவை தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டு பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர். எனவே ரயில்வே நிர்வாகம் உடன் நடவடிக்கை எடுத்து காரைக்குடியிலிருந்து பட்டுக்கோட்டைக்கு ரயில் சேவையை தொடங்க வேண்டும்.

பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், பேராவூரணி, அறந்தாங்கி பகுதியில் இருந்து தினமும் சென்னைக்கு சுமார் 100 பேருந்துகள் வரை செல்கிறது. முதியவர்கள், பெண்கள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள், நோயாளிகள், வியாபாரிகள் நலன் கருதியும், ரயில்வே துறைக்கு வரும்வருமானத்தை கணக்கில் கொண்டும்  பட்டுக்கோட்டை, காரைக்குடி, திருச்சி, அரியலூர், வழியாக சென்னைக்கு விரைவு இர‌யி‌ல் விட வேண்டும். ரயில்கள் இயங்காத காரணத்தால் ரயில்நிலையங்களில் சமூக விரோத செயல்கள் நடைபெறவும், ரயில்வே சொத்துகளுக்குசேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பட்டுக்கோட்டை திருவாரூர் அகலரயில்பாதை அமைக்கும் பணிகள்நடைபெற்று வருகிறது. இப்பணியினை துரிதமாக முடித்து சென்னைக்கு இரயில் வசதி செய்து தர வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை ரயில்வே துறை நிறைவேற்ற பொதுமக்கள், வர்த்தக நிறுவனங்கள், விவசாயிகள், மீனவர்கள், தன்னார்வ தொண்டர்கள் ஒத்துழைப்புடன் ரயில்வே அமைச்சர் அவர்களுக்கு ஆயிரக்கணக்கான அஞ்சல்அட்டைகள் மூலம் கோரிக்கைகளை அனுப்ப முடிவு செய்யப்பட்டது தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை, மன்னார்குடி - பட்டுக்கோட்டை புதிய  அகல ரயில்பாதைஅமைக்கும் பணிக்கான நில ஆர்ஜிதப்பணிகளை விரைவில் முடித்து, இப்பாதைகளில் விரைவில் இரயில் பாதை அமைக்கும் பணிகளை துவங்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவாக செயற்குழு உறுப்பினர் டி. பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.
 

Sunday, April 29, 2018

மருத்துவத்தில் ஓர் மைல்கல்! மூளையை மட்டும் 36 மணிநேரங்கள் உயிர்ப்புடன் வைத்திருந்து சாதனை!!

அதிரை நியூஸ்: ஏப்.29
நவீன மருத்துவத்தில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் முக்கிய இடம் வகிக்கின்றன. கண் (Eye), இதயம் (Heart Muscles), கணையம் (Pancreas), காது (Ear), எலும்புகள் (Bones), மூட்டுக்கள் (Limbs), கைகள் (Hands), விரல்கள் (Fingers), தோல் (Skin) மற்றும் சிறுநீர் பை (Bladder) போன்ற 10 பாகங்களை நாம் மாற்றிக் கொள்ள முடியும். மருத்துவ சாதனைகளால் பல மனித உயிர்களின் துடிப்புக்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தள்ளிப்போடப்படுகின்றன என்றால் மிகையில்லை.

ஒவ்வொரு உயிரினத்தின் உடற்பாகங்களிலேயே மூளையே மிக பிரதானமானதாகும், மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் வார்த்தையில் 'மூளை ஓர் தலைமைச் செயலகம்'. இந்த தலைமைச் செயலகத்தை உடலிலிருந்து அகற்றி சுமார் 36 மணிநேரங்கள் உயிர்ப்புடன் வைத்திருக்கும் ஆராய்ச்சியின் முதற்கட்ட சோதனையில் மருத்துவ விஞ்ஞானிகள் வெற்றி பெற்றுள்ளனர் என்றாலும் இன்னும் போக வேண்டிய தூரம் அதிகம் என்பதையும் மறுப்பதற்கில்லை.

அமெரிக்காவில் 1701 ஆம் ஆண்டு உருவான பழமையான 'யேல் யூனிவர்சிட்டியின்' (Yale University) நரம்பியல் துறை விஞ்ஞானி 'நினாத் செஸ்தான்' (Nuero-Scientist Nenad Sestan) என்பவர் சுமார் 100க்கு மேற்பட்ட பன்றிகளின் மூளைத் திசுக்களை பிரித்தெடுத்து செயற்கை முறையில் ஆக்ஸிஜனை வழங்கி அதன் இரத்த ஓட்டத்தை மீண்டும் இயங்கச் செய்ததன் மூலம் மூளையை சுமார் 36 நேரம் வரை உயிர்ப்புடன் வெற்றிகரமாக இயங்கச் செய்துள்ளார்.  (Researchers delivered oxygen to the cells via a system of pumps and blood maintained at body temperature)

இரத்த ஓட்டத்தின் மூலம் மூளையை உயிர்ப்புடன் வைத்திருப்பதன் வழியாக சில வகை புற்றுநோய்கள், நினைவாற்றல் இழப்பு (அல்சைமர்) போன்ற நோய்களுக்கு தீர்வு ஏற்படும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. மேலும் நினாத் செஸ்தான் மற்றும் 16 விஞ்ஞானிகள் அடங்கிய குழு மனித மூளையின் மீது இதே ஆராய்ச்சியை தொடர்வதற்கான அனுமதியையும், ஒத்துழைப்பையும் நேச்சர் சயின்ஸ் என்ற மருத்துவ இதழிடம் வேண்டியுள்ளனர். இந்தத் திட்டத்திற்கு BrainEx system என பெயரிட்டுள்ளனர்.

Source: Khaleej Times / AFP / Msn
தமிழில்: நம்ம ஊரான்

சீனாவில் 11 இஞ்ச் சைஸில் ராட்சஷ கொசு கண்டுபிடிப்பு!

அதிரை நியூஸ்: ஏப்.29
சீனாவின் செங்டு (Chengdu) நகரத்தில் உள்ள கின்செங்க் மலைக்கு (Mount Qingcheng) களஆய்வுக்காக சென்றிருந்த போது 'இம்மாம் பெரிய கொசு' பிடிபட்டுள்ளது. Holorusia mikado என்ற இனத்தை (species) சேர்ந்த இந்த கொசு பொதுவாக 8 இஞ்ச் வரை வளருமாம் ஆனால் அதையும் தாண்டி 11 இஞ்ச் வரை இது வளர்ந்துள்ளதால் கொசு இனத்திலேயே மிகப்பெரிய கொசு என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது.

சில மைக்ரோ மில்லிமீட்டர்களே இருக்கும் நம்ம ஏரியா கொசுக்களின் கடியே தாங்க முடியல, இது கடிச்சா போய்ச்சேர வேண்டியது தான் என பயப்பட வேண்டாம். இந்த கொசு சைவ கொசுவாம் மலர்களில் உள்ள தேன், பழங்களில் உள்ள ரசம் (Nectars) போன்றவற்றைளே உண்ணுமாம். இந்த 11 இஞ்ச் 'கடோத்கஜன்' சைஸ் கொசு Insect Museum of West China in Chengdu, the capital of Sichuan Province  என்ற இடத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படவுள்ளது.

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான் 

துபையில் வாகனங்களுக்கான 8 வகை லைசென்ஸ் பெற ஆன்லைன் வழிச்சேவை தொடக்கம்!

அதிரை நியூஸ்: ஏப்.28
துபையில் 8 வகை வாகன லைசென்ஸ் சேவைகள் ஆன்லைன் வழியாக மட்டுமே இனி கிடைக்கும்

துபை மாநகரை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றும் பணியின் ஒரு அங்கமாகவும், அதிகமான எண்ணிக்கையில் செயல்பட்டு வரும் சேவை மையங்களை குறைப்பதற்காக வேண்டியும் வாகனங்கள் தொடர்புடைய 8 வகையான லைசன்ஸ் வழங்கல்கள் நடப்பு 2018 ஏப்ரல் மாத இறுதியிலிருந்து முற்றிலும் ஆன்லைன் மயமாக்கப்படுவதுடன் இத்தகைய சேவைகள் அனைத்தும் ஜூன் மாதத்துடன் சேவை மையங்களிலிருந்து படிப்படியாக குறைக்கப்பட்டு முற்றிலும் நிறுத்திக் கொள்ளப்படும் என துபை போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

கீழ்க்காணும் 8 வகை சேவைகளை இனி துபை போக்குவரத்து துறையின்  (RTA Website (www.rta.ae), Dubai Drive App, Service Kiosks, and the Call Center (8009090) போன்ற ஆன்லைன் ஸ்மார்ட் சேனல்கள் வழியாகவே செய்யப்படும். 
1. renewal of registration of individually-owned vehicles that need testing,
2. list of registered vehicles,
3. return from tourist trips,
4. registration of the first owner,
5. vehicle(s) ownership certificate,
6. re-insurance certificate,
7. replacement of lost/damaged ownership certificate, and
8. clearance certificate

அதேபோல், எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்குள் மேலும் பல சேவைகளும் ஆன்லைன் சேவையாக மாற்றப்படவுள்ளது. குறிப்பாக,
1. payment of fines,
2. renewal of vehicle ownership with a different number plate, and
3. the changing of the number plate

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான் 

சுறா உட்பட 3 வகை விலங்குகள் தாக்கி உயிர் பிழைத்த இளைஞர்!

அதிரை நியூஸ்: ஏப்.29
4 வருடத்திற்குள் 3 முறை விலங்குகளால் தாக்கப்பட்டும் உயிருடன் உள்ள இளைஞர்

அமெரிக்காவின் கொலராடோவைச் சேர்ந்த 20 வயது இளைஞர் டைலான் மெக்வில்லியம்ஸ். இவர் ஒரு உயிர் தற்காப்பு பயிற்சியாளர் (survival training instructor), மிருகங்கள் மற்றும் ஆபத்து காலங்களில் எவ்வாறு நம்மை நாமே தற்காத்துக் கொள்வது என்பது குறித்து தனது தாத்தாவிடம் இளம்வயது முதல் பயிற்சி பெற்று பின் அதையே பிறருக்கும் கற்றுத்தந்து வருகிறார்.

இவரது 17 வயது முதல் 20 வயதே இன்னும் பூர்த்தியாக இந்த 4 ஆண்டுகளுக்குள் 3 வகையான விலங்குகளால் தாக்கப்பட்டு உயிர்பிழைத்துள்ளார். இவர் உயிர் பிழைத்த நிகழ்வுகளை அதிர்ஷ்டம் என்பதா? அல்லது கடிபட்ட நிகழ்வுகளை துரதிர்ஷ்டம் என்பதா? என பத்திரிக்கை பட்டிமன்றம்கள் நடத்திக் கொண்டுள்ளன. கெட்டதிலும் ஒரு நன்மையென நாம் கடந்து செல்வோம்.

இவரது 17வது வயதில் உடா (Utah) என்ற இடத்தில் நடந்து செல்லும் போது சுளீரென எதோ ஒன்று குத்தியுள்ளது, சப்பாத்தி கற்றாழை முள் தான் குத்திவிட்டதாக நினைத்தவருக்கு அங்கு சுருண்டு படித்திருந்த 'சங்கிலிக் கருப்பன்' (Rattlesnake) என்கிற கொடிய விஷமுள்ள பாம்பு தீண்டிய விஷயம் தெரிந்துள்ளது. 2 நாள் மருத்துவ சிகிச்கைக்குப் பின் பிழைத்துள்ளார்.

பின்பு கடந்த 2017 ஜூலை மாதத்தில் கொலராடோ மாநிலத்தில் ஒரு தற்காப்பு பயிற்சி முகாம் நடத்திவிட்டு மணலில் கடந்து உறங்கியவரை அதிகாலை 4 மணியளவில் ஒரு பெரிய கரடி ஒன்று கழுத்துப்புறமாக வந்து கவ்விப்பிடித்துள்ளது. தன்னை தாக்கியது எது என்று அறிய முடியாத நிலையிலும், தலையை திருப்பக்கூட முடியாத அந்த சூழ்நிலையிலும் அதன் கண்களை 'குத்துமதிப்பாக' தாக்கி தப்பித்துள்ளார். 9 இடங்களில் அதன் நகங்கள் அழமாக பதிந்திருந்தன, இந்த சம்பவத்திலும் 2வது முறையாக உயிர் பிழைத்தார்.

கடைசியாக கடந்த வாரம் ஏப்ரல் 19 ஆம் தேதி அன்று முன் ஹவாய் தீவில் படுத்தபடி விளையாடும் அலைச்சறுக்கு (body boarding) விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது சுமார் 2 மீட்டர் நீளமுடைய புலிச்சுறா (Tiger Shark) ஒன்று அவரது காலை தாக்கியது, அந்நிலையிலும் அந்த சுறாவை கால்களால் எட்டி உதைத்து தாக்கிவிட்டு கரையை நோக்கி விரைந்து தப்பியுள்ளார்.

சுறா தாக்கியதன் வலி தன்னுடைய ஒரு பக்க காலையே இழந்தது போன்ற உணர்வை தந்தது எனத் தெரிவித்துள்ளார். எனினும் தான் மிருகங்களை நேசிப்பதை நிறுத்தவோ, அவற்றை குறை சொல்லவோ மாட்டேன் என்னுடைய கடமையை தொடர்வேன் என தெரிவித்துள்ளார்.

Sources: bbc.com / Emirates 247
தமிழில்: நம்ம ஊரான் 

Saturday, April 28, 2018

அதிராம்பட்டினம் அல் மத்ரஸத்துஸ் ஸலாஹியா அரபிக்கல்லூரி 119-வது ஆண்டு விழா ~ பட்டமளிப்பு விழா (படங்கள்)

அதிராம்பட்டினம், ஏப்.26
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் அல் மதரஸத்துஸ் ஸலாஹியா அரபிக்கல்லூரி 119-வது ஆண்டு விழா மற்றும் மவ்லவி, ஹாஃபிழ், காரி பட்டமளிப்பு விழா காதிர் முகைதீன் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை காலை நடைபெற்றது.

விழாவுக்கு, மவ்லவி எல்.எம்.எஸ் முகமது அப்துல் காதர் தலைமை வகித்தார். எம்.கே.என் மதரஸா டிரஸ்ட் செயலர் எஸ்.ஜே அபுல் ஹசன் மற்றும் ஆட்சி மன்றக் குழுத் தலைவர், உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.

மவ்லவி. பி.எம்.எம் ஆதம் லெப்பை ஃபலாஹி, மவ்லவி ஜியாவுத்தீன் ஆகியோர் மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி வாழ்த்துரை வழங்கினார். இதில், கல்லூரி மாணவர்கள் மவ்லவி. முகமது அனஸ்க்கு ஸலாஹி ஆலிம் மற்றும் காரி பட்டங்களும், எஸ்.அப்துல்லாவுக்கு காரி பட்டமும், எம்.எஸ் சஹ்ல், எம்.எஸ் சுஹைல், ஏ.முகமது வாசிம் அக்ரம், கே. சபீர் ஆகிய 4 பேருக்கு ஹாஃபிழ் பட்டங்கள் வழங்கப்பட்டன. மேலும், கல்லூரியில் அதிக மதிப்பெண் மற்றும் கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

சிறப்பு விருந்தினராக ஜம்இய்யத்துல் உலமா பத்வா குழு உறுப்பினர் மவ்லவி எம்.எச்.எம் யஹ்யா விழாப் பேரூரை வழங்கினார். மேலும்,  திருநெல்வேலி ரியாழுல் ஜினான் அரபிக் கல்லூரி முதல்வர் எம்.ஹுமாயுன் கபீர், கல்லூரி பேராசிரியர் மவ்லவி எஸ்.ரஷீத் அகமது காசிமி ஆகியோர் சிறப்புரை வழங்கினர்.

கல்லூரி முதல்வர் மவ்லவி ஏ.எஸ் அகமது இப்ராஹீம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். முன்னதாக கல்லூரிப் பேராசிரியர் மவ்லவி சபியுல்லா அன்வாரி வரவேற்றுப் பேசினார். விழா முடிவில், கல்லூரி மேலாளர் ஏ.எஸ்.எம் அகமது கபீர் நன்றி கூறினார். விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள், ஊர் பிரமுகர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
 

ஆஸ்திரேலியா கடலில் உலகின் மிகப்பழமையான பாட்டில் கடிதம் கண்டெடுப்பு!

அதிரை நியூஸ்: ஏப்.28
இதுவரை கண்டெடுக்கப்பட்ட செய்திக் கடிதங்களிலேயே மிகப்பழமையானதாக கருதப்படும் ஒரு பாட்டிலில் அடைக்கப்பட்டிருந்த கடிதத்தை மேற்கு ஆஸ்திரேலியா பகுதியிலுள்ள வெட்ஜ் தீவு அருகே கைம், டோன்யா இல்மேன் என்ற இருவர் கடலிலிருந்து கண்டெடுத்துள்ளனர்.

கருப்பு நிற பாட்டில் மிதந்து வருவதை கவனித்த டோன்யா முதலில் அதை குப்பையாக நினைத்தார் ஆனால் கூர்ந்து கவனித்த போது அதனுள் ஒரு பழைய சுற்றப்பட்ட நிலையிலான கடிதம் இருந்ததை கண்டு பிரம்மித்தார். அந்தக் கடிதம் 1886 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் தேதி 'பவுலா' (Paula) என்கிற ஜெர்மானியா ஆராய்ச்சி கப்பலில் இருந்து எழுதி மிதக்கவிடப்பட்டுள்ளது.

இந்தக் கடிதத்தில், இதை கண்டெடுப்பவர்கள் எங்கு கண்டெடுத்தீர்கள் என்ற விபரங்களுடன் ஜெர்மனியின் கடற்படை ஆய்வகத்திற்கு (German Naval Observatory) தெரிவிக்குமாறு வேண்டப்பட்டிருந்தது. கடல் நீரோட்டம் குறித்த இந்த ஆராய்ச்சியை ஜெர்மனி 1864 ஆம் ஆண்டு முதல் 1933 ஆம் ஆண்டு வரை மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பாட்டிலில் அடைத்து விடப்பட்ட இந்த கடித செய்தியை 'பவுலா' கப்பலின் கேப்டன் இந்தியப் பெருங்கடலை கடக்கும் போது கடலில் மிதக்கவிட்டது ஜெர்மானிய ஆவணங்களின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த கடிதம் Western Australian Maritime Museum என்ற அருங்காட்சியகத்தில் 2020 வரை பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Source: Mental Floss / Msn
தமிழில்: நம்ம ஊரான் 

ஹோட்டல்களாக மாற்றப்பட்ட உலகின் 18 அழகிய குகைகள் (படங்கள்)

1 Anitya Cave House, Cappadocia, Turkey
அதிரை நியூஸ்: ஏப்.28
குகைகள் என்றாலே ஒரு அதிபயங்கரத் தோற்றம் உள்ளில் மின்னி மறைவதை உணர்வோம் என்றாலும் பல குகைகள் ஆதிமனிதர்களின் வரலாற்றோடு தொடர்புடையவை. இன்னும் சில குகைகள் நீர்வழித்தடங்களாக உள்ளன. இந்தியாவிலுள்ள சில குகைகள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஓவியங்களை, கல்வெட்டுக்களையும், சிற்பங்களையும் சுமந்து கொண்டுள்ளன. தற்போதும் உலகின் பல குகைகள் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாக மாற்றப்பட்டு வருகின்றன.

இன்னும் பல்லாயிரம் குகைகள் கண்டுபிடிக்கப்படாமலும், மனித பாதங்கள் படாமலும் உள்ளன. இந்நிலையில், உலகின் எண்ணற்ற குகைகள் பொருளாதாரத்தை ஈட்டித்தரும் சொகுசு ஹோட்டல்களாக, குளித்து கும்மாளமிடும் குளங்களாகவும் மாற்றப்பட்டுள்ளன. அவ்வாறு உருமாறிய உலகின் 18 குகைகளை பற்றி மட்டும் இப்பதிவினூடாக புகைப்பட வடிவில் காண்போம்.

Source: Huff Post / Msn
தமிழில்: நம்ம ஊரான் 
2 Lava Cave, Santorini, Greece
3 Azalea Houses Cave, Oia, Greece
4 Loft Cave Sea Views, Guia, Gran Canaria
5 Casa Santantonio, Santorini, Greece
6 Unique Beckham Cave Home, Parthenon, Arkansas, USA
7 White Dream, Puglia, Italy
8 Cave Socorro, Guimar, Tenerife
9 Ortahisar, Nevşehir, Turkey
10 Cuevo de Luja, Granada, Spain
11 The Rockhouse Retreat, Worcester, UK
12 Bagnoregio, Viterbo, Italy
13 Andaraí, Bahia, Brazil
14 Los Montes, Granada, Spain
15 Cohabitat Sassi, Matera, Italy
16 Domed Underground Home, Tarragona, Spain
17 Finikia, Greece
18 The Whale House, Santa Barbara, CA

சீனாவில் குழந்தையை பைக்கின் பின்சீட்டில் கட்டிவைத்து கதறக்கதற பள்ளிக்கூடம் கொண்டு சென்ற தந்தை (வீடியோ)

அதிரை நியூஸ்: ஏப்.28
சிறுவயதில் பள்ளிக்கூடம் செல்வதென்றாலே கசக்கும், பெரும்பாலான குழந்தைகளின் இயல்பும் அதுவே. பெற்றோர்களின் இயல்பு தனது குழந்தை ஒழுங்காக பள்ளிக்கூடம் சென்று படித்து பெரியாளாக வேண்டும் என்பதே. இந்த போராட்டத்தில் பெரும்பாலும் தாய்மார்கள் அன்பால் வென்றுவிடுவார்கள், தந்தையர்களோ பாசத்தைக் கூட சிலவேளைகளில் வன்முறையாக வெளிப்படுத்திவிடுவார்கள் அதனால் விளைவுகளும் விபரீதமாகிவிடுவது உண்டு.

சீனாவின் குவாங்டோங் மாகாணத்தின் யுன்ஃபு எனும் நகரத்தில் (Guangdong city of Yunfu) ஒருவர் ஒரு சிறுவயது பெண் குழந்தையை தனது பைக் பின் சீட்டில் வைத்துக்கட்டிய நிலையில் நகர வீதிகளின் வழியாக கொண்டு சென்றார். குழந்தையோ செல்லும் வழியெங்கும் கட்டப்பட்ட நிலையில் கதறித் தீர்த்தது. பார்ப்பவர்களுக்கு யரோ ஒருவர் குழந்தையை கடத்திச் செல்வது போல் தோற்றமளித்துள்ளது.

இந்த கொடிய காட்சியின் பதிவுகள் சமூக வலைத்தளங்களில் பரவியதை தொடர்ந்து போலீஸார் சம்பந்தப்பட்ட நபரை பிடித்து விசாரித்தனர். தனது பெண் குழந்தை பள்ளிக்கூடம் செல்ல மறுத்ததாலேயே அவ்வாறு கடுமையாக நடந்து கொண்டதாக அவர் விளக்கமளித்ததை ஏற்றுக் கொண்ட போலீஸார் அவரை கடுமையாக எச்சரித்து, மன்னித்து அனுப்பிவிட்டனர்.

இதேபோல் சீனாவில் நடைபெற்ற மற்றுமொரு சம்பவத்தில், கர்ப்பிணி பெண் ஒருவர் தனது 4 வயது மகனை தூக்கியெறிந்த அதிர்ச்சிகர சம்பவமும் வீடியோ பதிவாக சமூக தளங்களில் சுற்றி வந்தது. பிறப்பு முதல் இதயக்குறைபாடுள்ள இந்த சிறுவனுக்கு 'புத்திபடித்து' கொடுக்கவே அவ்வாறு செய்ததாக அப்பெண் வாக்குமூலம் அளித்திருந்தார். மேல் விபரங்கள் ஏதும் சொல்லப்படவில்லை.

Sources: medium.com / Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான் 

Friday, April 27, 2018

அதிரையில் கால்பந்தாட்ட தொடர் போட்டி கோலாகல தொடக்கம் ~ பட்டுக்கோட்டை அணி 4 கோல் போட்டு அசத்தல் வெற்றி (படங்கள்)

அதிராம்பட்டினம், ஏப். 27
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் வெஸ்டர்ன் ஃபுட் பால் கிளப் (WFC) நடத்தும் 8 வது ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மேலத்தெரு மருதநாயகம் மைதானத்தில் வெள்ளிக்கிழமை மாலை தொடங்கியது.

தொடர் போட்டியில், அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, சென்னை, பள்ளத்தூர், காரைக்குடி, நாகூர், கூத்தாநல்லூர், புதுக்கோட்டை, காரைக்குடி, பள்ளத்தூர், அத்திக்கடை, பொதக்குடி உள்ளிட்ட மொத்தம் 24 அணிகள் கலந்துகொண்டு விளையாட உள்ளனர்.

இன்று (ஏப்.27) நடந்த முதல் நாள் ஆட்டத்தில் பட்டுக்கோட்டை அணியினரும், கோட்டைப்பட்டினம் அணியினரும் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்ட இறுதியில் 4-1 என்ற கணக்கில் 4 கோல் அடித்து பட்டுக்கோட்டை அணியினர் வெற்றி பெற்றனர்.

முன்னதாக, சிறப்பு அழைப்பாளர்களாக தாஜுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள் எம்.எம்.எஸ் சேக் நசுருதீன், ம.செ ஜபருல்லாஹ், கே.எஸ்.எம் பகுருதீன், கால்பந்தாட்ட பயிற்சியாளர் லியாகத் அலி, எஸ்.எஸ்.எம்.ஜி பசூல்கான், அதிரை அகமது ஹாஜா, அகமது அனஸ், ஜபருல்லா, அப்துல் வஹாப் ஆகியோர் கலந்து கொண்டு வீரர்களுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்து முதல் ஆட்டத்தை தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியினை, அதிரை அகமது ஹாஜா தொகுத்து வழங்கினார். ஆட்டத்தின் நடுவர்களாக அதிரை ஷபானுதீன், அத்திவெட்டி நீலகண்டன் ஆகியோர் பொறுப்பு வகித்தனர்.

தொடர் போட்டியின் முடிவில் சாம்பியன் பட்டம் பெறுகின்ற அணிக்கு ரூ.20 ஆயிரம் ரொக்கம் மற்றும் சுழற்கோப்பை பரிசும், வின்னர் பட்டம் பெறுகின்ற அணிக்கு ரூ.15 ஆயிரம் ரொக்கம் மற்றும் சுழற்கோப்பை பரிசும் வழங்கப்பட உள்ளது. மேலும், தொடர் போட்டிகளில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துகின்ற ஆட்டநாயகன், தொடர் நாயகன், சிறந்த கோல் கீப்பர் உள்ளிட்ட வீரர்களுக்கு சிறப்பு பரிசுகள், கேடயப்பரிசுகள் வழங்கப்பட உள்ளன. தொடர் போட்டி இன்று (ஏப்.27) தொடங்கி வரும் மே 11 ந் தேதி வரை நடைபெற உள்ளது.

முதல்நாள் ஆட்டத்தைக்காண ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள் மற்றும் ஊர் பிரமுகர்கள் மைதானத்திற்கு வருகை தந்து ரசித்தனர்.

நாளை 2 ஆட்டங்கள்:
நாளை சனிக்கிழமை ஆட்டங்கள் நடைபெற உள்ளது. முதல் ஆட்டத்தில், அத்திவெட்டி அணியினரோடு, ஆலத்தூர் அணியினர் மோத உள்ளனர். 2 வது ஆட்டத்தில் அதிராம்பட்டினம் AFFA அணியினரோடு, நாகூர் அணியினர் மோத உள்ளனர்.  நாளைய ஆட்டம் சரியாக மாலை 4.30 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.