.

Pages

Tuesday, April 17, 2018

உலகில் மிகவும் முதிய வயதில் குழந்தை பெற்றுக் கொண்ட 12 தீரப்பெண்மணிகள் (படங்கள்)

அதிரை நியூஸ்: ஏப்.17
நம் சமகால உலகில் மிகவும் முதிய வயதில் குழந்தை பெற்றுக் கொண்ட 12 தீரப்பெண்மணிகள்

குழந்தைகளை சூழ்கொண்டு சுமந்து பெற்று அழகிய முறையில் அவர்களை வளர்த்தெடுப்பதென்பது மிகவும் வலிகள் நிறைந்த பேரின்பம். நம்மில் பலருக்கும் காலாகாலத்தில் குழந்தைபேறுகள் நிகழ்ந்தாலும் வெகுசிலருக்கு அப்பாக்கியமே கிடைக்காமலும் போகலாம். இன்னும் வெகுசிலருக்கு இறைவனின் உதவியால் இன்றைய நவீன மருத்துவங்கள் கை கொடுக்கின்றன. முதிய வயதில் குழந்தைகளை பெற்று பேரின்பமடைந்த நிகழ்கால உலகின் 12 அருமை அன்னைகளை அறிந்து கொள்வோம்.

இச்சாதனை அன்னையர்களில் பலர் இந்தியர்கள் என்பதும், பலர் ஒரே பிரசவத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக் கொண்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தல்ஜிந்தர் கவுர்

1.தல்ஜிந்தர் கவுர் (இந்தியா, ஹரியானா IVF Method மூலம் 46 ஆண்டுகளுக்குப் பின்)
இவர் தனது 72வது வயதில் ஒரு குழந்தையை பெற்றெடுக்கும் போது இவரது கணவரின் வயது 79. இவரே மிகவும் முதிய வயதில் குழந்தையை பெற்றுக் கொண்டவர் என்ற சாதனையை தன்னகத்தே வைத்துள்ளார்.
ரஜோ தேவி லோஹன்
2. ரஜோ தேவி லோஹன் (இந்தியா, ஹரியானா IVF Treatment மூலம்)
தனது கடைசி குழந்தையை பெற்றுக் கொள்ளும் போது இவரது வயது 69. மருத்துவ பதிவுகளின் படி இவரே மிகவும் முதிய வயதில் குழந்தை பெற்றுக் கொண்டவராக பதிவு செய்யப்பட்டுள்ளார்.
எலிஸாபெத் அடேனே
3. எலிஸாபெத் அடேனே
கிரேட் பிரிட்டனிலேயே மிகவும் முதிய வயதில் அதாவது 66வது வயதில் குழந்தை பெற்றுக் கொண்டவராக பதிவு செய்யப்பட்டுள்ளார். தற்போது இவருடைய பிஸியான வேலைகளில் ஒன்று தொலைக்காட்சிகள் மற்றும் ரேடியோ நகழ்ச்சிகளில் கலந்து கொண்டு குழந்தை பெற்ற அனுபவம் குறித்து பேட்டியளிப்பது.
பத்தேரி தேவி சிங்
4. பத்தேரி தேவி சிங் (இந்தியா, ஹரியானா IVF Treatment மூலம்)
தனது 66வது வயதில் ஒரே பிரசவத்தில் 2 பெண் 1 ஆண் என 3 குழந்தைகள் பெற்றெடுத்தவர். 1 பெண் குழந்தை இறந்துவிட்ட நிலையில் 2 குழந்தைகளும் தற்போது ஓரளவு வளர்ந்துவிட்ட நிலையில் இவரும் நல்ல ஆரோக்கியதுடனேயே உள்ளார்.
அட்ரியேனா இலியஸ்கு
5. அட்ரியேனா இலியஸ்கு
ருமேனியாவைச் சேர்ந்த 66 வயதுடைய இப்பெண் 3 குழந்தைகளை எதிர்பார்த்திருந்த நிலையில் ஒரேயோரு குழந்தை மட்டுமே பிறப்பிற்குப் பின் பிழைத்தது. தற்போது அந்த பெண் குழந்தை ருமேனியர்களால் நேசிக்கப்படும் குழந்தையாக உருவெடுத்துள்ளார்.
ஓம்காரி பன்வார்
6. ஓம்காரி பன்வார் (இந்தியா, உத்தர பிரதேஷ்)
ஏற்கனவே 2 பெண் குழந்தைகளும் அவர்கள் மூலம் பேரன், பேத்திகள் உள்ள நிலையில் தனது கணவரின் சொத்துக்களை நிர்வகிக்க ஒரு ஆண் வாரிசு வேண்டும் என்கிற ஒரே காரணத்திற்காகவே மருத்துவ சிகிச்சைகள் மூலம் தனது 66வது வயதில் குழந்தை பெற்றுக் கொள்ள முன்வந்தார். பிறந்ததோ இரட்டையர்கள் ஆண் ஒன்று பெண் ஒன்று. குழந்தைகள் பிறந்த 3 ஆண்டுகளில் தாய் உடல்நல காரணங்களால் மரணமடைந்தார்.
மரியா டெல் கர்மான் பவ்ஸடா டி லாரா
7. மரியா டெல் கார்மன் பவ்ஸடா டி லாரா (ஸ்பெயின்)
மருத்துவர்களிடம் 55 வயது என பொய் கூறி குழந்தைபேறுக்காக சிகிச்சை எடுத்துக் கொண்டார். சூழ்கொண்ட பின்பே உண்மை தெரிந்தது அவருக்கு 66 வயது என்று ஆனால் விஷயம் கைமீறிச் சென்றுவிட்டதால் ஒருவழியாக இரட்டை குழந்தைகளை பெற்றுக் கொண்டார். எனினும், பிரசவத்திற்குப் பின் 3 ஆண்டுகள் கூட நிறைவடையாத நிலையில் மரணம் இவரை தழுவிக்கொண்டது.
வேலன்டையா பிட்வெர்பனா
8. வேலன்டைனா பிட்வெர்ப்னா
உக்ரேன் நாட்டைச் சேர்ந்த இந்தப் பெண்ணும் தனது 66 வயதில் மருத்துவ உதவியுடன் தான் தனது முதலாவது குழந்தை பெற்றுக் கொண்டார். உக்ரேன் நாடு மற்றும் அதன் சுற்றுப்புற நாடுகளில் நிலவும் குறைவான மருத்துவ வளர்ச்சியை ஒப்பிடும் போது குழந்தை பேறுக்குப் பின் இவர் பிழைத்திருப்பது பெரிய சாதனையே.
அன்னிகிரட் ரவ்னீக்
9. அன்னிகிரட் ரவ்னீக்
இவர் தனது 65 வயதில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றுக் கொண்டார். மொத்தம் 17 குழந்தைகளை பெற்றெடுத்துள்ள இவரது மூத்த குழந்தையின் வயது 44. இந்த ஜெர்மானியப் பெண்ணே 60 மேற்பட்டோரில் அதிக குழந்தைகளுடன் ஜீவித்திருக்கும் ஒரே ஐரோப்பியப் பெண் என்ற பட்டத்தை பெற்றுள்ளார்.
மெம்னூன் திர்யாகி
10. மெம்னூன் திர்யாகி (துருக்கி, இஸ்தான்பூல்)
இந்த 62 வயது பெண் தனது 35 வருட மணவாழ்க்கை போராட்டத்திற்குப் பின் IVF மருத்துவ உதவியுடன் குழந்தை பாக்கியத்தை பெற்றார்.
டான் புரூக்
11.டான் புரூக்
இங்கிலாந்தை சேர்ந்த இந்தப் பெண்மணி தனது 59வது வயதில் இயற்கை முறையிலேயே கருவுற்று இயற்கையாகவே குழந்தையை பெற்றுக் கொண்ட காரணத்தால் கின்னஸ் சாதனை புத்தகத்தில் முதிய வயதில் இயற்கையான பிரசவத்தை சந்தித்தவர் என்ற அதிகாரபூர்வ அங்கீகாரத்தை பெற்றுள்ளார்.
ரைஸா அக்மதீவா
12. ரைஸா அக்மதீவா
ரஷ்யாவைச் சேர்ந்த இப்பெண் தனது 56வது வயதில் இயற்கையான முறையில் கருவுற்று ஆனால் குறை பிரசவத்தின் மூலம் தனது முதலாவது குழந்தையை பெற்றுக் கொண்டார். எனினும் குறை பிரசவத்தில் பிறந்த தனது மகனை காப்பாற்ற இவரும் இவரது குடும்பமும் 2 ஆண்டுகள் பலவித கஷ்டங்களை சந்தித்தது.

Source: http://wojournals.com
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.