.

Pages

Friday, April 27, 2018

தக்வா பள்ளிவாசல் மஹல்லாவாசிகள் ஆலோசனைக்கூட்டத்தில் ரமலான் நோன்பு கமிட்டியினர் தேர்வு (படங்கள்)

அதிராம்பட்டினம், ஏப்.27
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் தக்வா பள்ளிவாசல் மஹல்லாவாசிகள் ஆலோசனைக்கூட்டம் பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு, ஹாஜி அப்துல் ரெஜாக் தலைமை வகித்தார். ஹாஜி கே.எஸ் சுக்கூர், ஹாஜி எம்.எஸ் ஷிஹாபுதீன், ஹாஜி எஸ். முகமது அஸ்லம், ஹாஜி அப்துல் ஜப்பார், ஹாஜி அபுல் ஹசன், பேராசிரியர் அப்துல் காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், புனிதமிகு ரமலான் நோன்பு தொடங்குவதை முன்னிட்டு, தக்வா பள்ளவாசல் சார்பில், வழமைபோல் நடந்து வரும் நோன்பு கஞ்சி விநியோகம், 'இஃப்தார்' நோன்பு திறக்கும் நிகழ்ச்சி, அதிரை வாழ் வெளியூர் பிரமுகர்கள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோருக்கு சஹர் உணவு வழங்குதல் உள்ளிட்டவற்றை, இந்தவருடமும் ஏற்பாடு செய்வது எனவும், இப்பணிக்காக தக்வா பள்ளிவாசல் தலைமை இமாம் மவ்லவி. எம்.எப் முகமது தமீம், ஏ.சாகுல் ஹமீது, இசட். முகமது மாலிக், ஏ.சலீம் ஆகியோரை பொறுப்பாளர்களாக நியமிப்பது என தீர்மானிக்கப்பட்டன.  இக்கூட்டத்தில் தக்வா பள்ளிவாசல் மஹல்லாவாசிகள் பலர் கலந்துகொண்டார்கள். 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.