.

Pages

Thursday, April 26, 2018

அதிராம்பட்டினத்தில் தினகரனுக்கு வரவேற்பு (படங்கள்)

அதிராம்பட்டினம், ஏப்.26
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாநில துணைப் பொதுச் செயலாளரும், ஆர்.கே நகர் சட்டமன்ற உறுப்பினருமாகிய டி.டி.வி தினகரனுக்கு அக்கட்சியினர் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் வரவேற்பு அளித்தனர்.

அமமுக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் எம்.எல்.ஏ இன்று வியாழக்கிழமை காலை அதிராம்பட்டினம் ஈஸ்ட் கோஸ்ட் சாலை வழியாக இராமநாதபுரம் பயணம் மேற்கொண்டார். அமமுக அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் ஏ. ஜமால் முகமது தலைமையில், அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் பட்டாசு வெடித்து, சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர், அதே சாலையில் மீண்டும் மாலை திரும்பி வந்த போது, அதிராம்பட்டினத்தில் ஐக்கிய தேசிய மக்கள் கட்சியின் நிறுவனர் அதிரை எம்.முகமது இப்ராஹீம் தலைமையில், அக்கட்சியை சேர்ந்த சம்சுதீன் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.

இந்நிகழ்ச்சியில், அமமுக மாநில அமைப்புச் செயலாளர் பண்ணைவயல் சு.பாஸ்கர், பட்டுக்கோட்டை நகர் மன்ற முன்னாள் தலைவர் எஸ்.ஆர் ஜவஹர் பாபு, அமமுக பாட்டுக்கோட்டை ஒன்றியச் செயலர் ரமேஷ்,  அமமுக அதிராம்பட்டினம் பேரூர் ஒருங்கிணைப்பாளர் எம்.பி அபுபக்கர், அதிராம்பட்டினம் பேரூர் பொருளாளர் எம்.ரபீக் அகமது, அமமுக கட்சியை சேர்ந்த அய்யாவு, சிராஜுதீன், இஸ்மாயில், அ.மு அப்துல் ஜப்பார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.