அதிரை நியூஸ்: ஏப்.23
யூ டியூபால் நல்லதும் நடக்குமுங்க! 40 ஆண்டுகளுக்கு பின் சேர்த்து வைத்த ஹிந்தி பாடல்!
தமிழ் உட்பட பழைய இந்திய சினிமாக்களில் பிரிந்து போன குடும்பம் அல்லது அண்ணன் தம்பிகள் பாடல்களால் இணைவது போன்று காட்சிப்படுத்தப்பட்டிருக்கும், இதுபோன்ற காட்சிகள் எம்ஜிஆர் நடித்த படங்களில் அதிகம் இடம் பெற்றிருந்திருக்க வாய்ப்பு உண்டு.
பொதுவாக சினிமாக்களில் வரும் நம்ப முடியாத காட்சிகள் நிஜ வாழ்வில் நடக்க வாய்ப்பேயில்லை தான் ஆனால் மும்பையில் ஒரு பாடலால் 40 வருடத்திற்குப் பின் பிரிந்த குடும்பம் இணைந்த அபூர்வமும் நடந்தேறியுள்ளது.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரின் தலைநகர் இம்பாலை சேர்ந்தவர் கொம்துராம் கம்பீர் சிங். இவர் 40 வருடங்களுக்கு முன் அதாவது 1978 ஆம் ஆண்டு தனது 26வது வயதில் வீட்டை விட்டு ஓடிவந்து விட்டார் அதற்குப் பின் இவர் குறித்து தகவலேயில்லை.
மணிப்பூரிலிருந்து சுமார் 3,300 கி.மீ (2,000 மைல்) தூரம் பயணம் செய்து மும்பை வந்து சேர்ந்தார். இங்கு கட்டிடத் தொழிலாளியாக பணியாற்றிய போது ஏற்பட்ட 2 விபத்துக்களில் ஏற்பட்ட எலும்பு முறிவுகளால் தொடர்ந்து வேலை செய்ய இயலாமல் போனதுடன் குடியும் சேர்ந்து கொண்டதன் விளைவாக தெருவில் பாட்டுப்பாடி பிச்சையெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
மும்பையின் பாந்த்ரா பகுதியின் தெருக்களில் ஒருநாள் இவர் பழைய ஹிந்திப்பாடல்களை; பாடிக்கொண்டு செல்லும் போது ஈர்க்கப்பட்ட ஷாகிர் என்பவர் அதை படம்பிடித்து யூடியூபில் வெளியிட்டார். அந்தப் பதிவில் தனது பெயர் கொம்துராம் கம்பீர் சிங், மணிப்பூரைச் சேர்ந்தவர் என்கிற தகவலையும் சொல்லியிருந்தார்.
மணிப்பூர், இம்பால் நகரைச் சார்ந்த சிலர் இத்தகவலை யூடியூபில் ஏதெச்சையாக பார்த்து அவரது குடும்பத்தாரிடம் தகவல் சொல்ல, அவரது சகோதரர் மணிப்பூர் போலீஸாரிடம் உதவி கேட்க, மணிப்பூர் போலீஸார் மும்பை போலீஸாரை தொடர்பு கொள்ள, ஒருவழியாக மும்பையிலிருந்து மீட்கப்பட்ட கொம்துராம் மணிப்பூர் அழைத்து வரப்பட்டு அவரது சகோதரரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
கொம்துராம் கம்பீர் வீட்டைவிட்டு ஓடிவருமுன் ராணுவத்திலும் பணிபுரிந்துள்ளதுடன் மனைவியுடன் ஏற்பட்ட சச்சரவு மற்றும் குறுகிய கால திருமண வாழ்வு ஏற்படுத்திய ரணங்களாலேயே மும்பைக்கு ஓடினாராம். ஒருவழியாக சினிமா கற்பனை ஒன்று நிஜமாகியுள்ளது.
Source: Emirates 247 / AFP
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.