பட்டுக்கோட்டை ஏப்.18
காஷ்மீரில் மதவெறிக் கும்பலால் கோயில் கருவறையில் வைத்து பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்டு, சிறுமி ஆஷிபா படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து அனைத்து கட்சிகள் சார்பில் பட்டுக்கோட்டை தலைமை தபால்நிலையம் அருகில் புதன்கிழமை காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் ஒன்றியச்செயலாளர் எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன் நிறைவுரையாற்றினார்.
சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் எம்.செல்வம், மதிமுக நிர்வாகி செந்தில்குமார், திமுக நிர்வாகிகள் க.அண்ணாதுரை (முன்னாள் எம்எல்ஏ), எஸ்.ஆர்.என்.செந்தில்குமார் (திமுக நகரப் பொறுப்பாளர்), அப்துல்சமது, சிபிஐ மாவட்ட நிர்வாகக்குழு சி.பக்கிரிசாமி, தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகி ஏ.கே.குமார், காங்கிரஸ் வட்டார தலைவர் காசிநாதன், தமிழக மக்கள் உரிமைக் கழக நிர்வாகி முருகையன் மற்றும் சிபிஎம் ஒன்றிய, நகர நிர்வாகிகள் உள்ளிட்ட 100 பேர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஆஷிபா படுகொலைக்கு நீதி கேட்டும், குற்றவாளிகளை தண்டிக்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.