முத்துப்பேட்டை, ஏப்.25
முத்துப்பேட்டையில் குடிநீர் குழாயில் பொருத்தியிருந்த 36 மின் மோட்டார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் முறைகேடான 15 இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. முத்துப்பேட்டை பேரூராட்சி பகுதிகளுக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி திருத்துறைபூண்டியிலிருந்து பம்பிங் செய்யப்படும் குடிநீர் மெயின் பைப் லைன் வழியாக எடையூர் வந்து பின்னர் அங்கிருந்து முத்துப்பேட்டைக்கு வருகிறது. இதற்கிடையே பல பகுதிகளில் குழாய்களல் ஏற்பட்டுள்ள உடைப்பின் காரணமாக குடிநீரின் அளவு குறைந்துவிடுகிறது. இதனால் முத்துப்பேட்டையில் பொதுமக்களில் ஒரு பகுதியினர் லாரிகளில் இருந்து குடிநீர் விலைக்கு வாங்கி வருகின்றனர்.
இதுபோன்ற நிலையில் பலரும் குடிநீர் குழாயில் சட்டவிரோதமாக மின் மோட்டார் பொருத்தி தண்ணீரை எடுத்து வருகின்றனர். இதனை பேரூராட்சி அதிகாரிகள் தடுக்க வேண்டும் என்று பொதுமககள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்தநிலையில் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுவோர் மின் மோட்டார்களை அவர்களாகவே அகற்றிக்கொளள் வேண்டும் என்று சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து பேரூராட்சி செயல் அலுவலர்(பொ) செந்திலன் தலைமையில் உதவி பொறியாளர்கள் தியாகராஜன், சதீஸ்பாபு, சத்தியமூர்த்தி, திருச்செல்வம், முரளி, இளநிலை உதவியாளர் பிரபாகர் ஆகியோர் தலைமையிலான குழுவினர் பேரூராட்சியில் 6 வார்டுகளில் உள்ள வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வீடுகளில் குடிநீர் குழாயில் இணைக்கப்பட்டடிருந்த 36 மின் மோட்டார்கள் 5 சிறிய கை பம்புகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் 15 அனுமதியற்ற குடிநீர் இணைப்புகள் கண்டறியப்பட்டு துண்டிக்கப்பட்டது. இந்த ஆய்வின் காரணமாக முத்துப்பேட்டையில் பரபரப்பு ஏற்பட்டது. 15 இணைப்புகள் துண்டிப்புமுத்துப்பேட்டை பேரூராட்சி பகுதியில் குடிநீர் குழாய் களில் இணைக்கப்பட்டதால் பறிமுதல் செய்யப்பட்ட மின் மோட்டார்கள், பம்புகளுடன் அதிகாரிகள்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.