.

Pages

Monday, April 23, 2018

பெண்கள் தனியாக சுற்றுலா செல்லக்கூடாத ஆபத்தான நாடுகளின் பட்டியல் வெளியீடு!

அதிரை நியூஸ்: ஏப்.23
பெண்கள் தனியாக சுற்றுலா செல்ல மிகவும் பாதுகாப்பான 5 நாடுகள் மற்றும் மிகவும் ஆபத்தான 5 நாடுகள் என்ற பட்டியலை ஒரு சர்வதேச சுற்றுலா இணையதளம் வெளியிட்டுள்ளது.

இந்தப் பட்டியலின்படி பாதுகாப்பான நாடுகள் என சொல்லப்படும் இடங்களில் கூட சில ஆபத்துக்கள் மறைந்திருந்தாலும் மனித மிருகங்களால் ஏற்படும் ஆபத்துக்கள் குறைவே என சொல்லப்பட்டுள்ளது ஆனால் ஆபத்தான நாடுகள் என்ற பட்டியலின் கீழ் வரும் நாடுகளில் புறக்காரணங்களால் ஏற்படும் ஆபத்துக்ககளை விட மனித உறு மிருகங்களால் ஏற்படுவதே அதிகம் என காரணம் சொல்லப்பட்டுள்ளது.

பெண் சுற்றுலாவாசிகளுக்கு பாதுகாப்பான 5 நாடுகள்:
1. நெதர்லாந்து 2. ஐஸ்லாந்து 3. இத்தாலி 4. டென்மார்க் 5. ஆஸ்திரேலியா

பெண் சுற்றுலாவாசிகளுக்கு பாதுகாப்பற்ற 5 நாடுகள்:
1. துருக்கி 2. எகிப்து 3. இந்தியா 4. கொலம்பியா 5. பிரேசில்

பிற நாடுகளின் பிளஸ் மைனஸ்களை விட்டுவிடுவோம் ஆனால் இந்தியா ஏன் ஆபத்தான நாடுகளில் ஒன்றாக சர்வதேச அரங்கில் நிற்கிறது என்பதற்கான காரணத்தை நாம் அறிந்து கொள்வது அவசியமாகும்.

//இந்தியா ஓர் வளமான கலாச்சாரம், கலைகள், ருசியான உணவு பழக்கங்களை கொண்டதொரு அழகிய நாடு தான் ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது தனியாக வரும் பெண் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பான நாடு அல்லவே அல்ல.

வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணிகளை கற்பழித்தல், கொலை செய்தல், கொள்ளையடித்தல், பாலியல் துன்புறுத்தல் செய்தல் போன்ற கடும் குற்றச் செயல்களை சர்வ சாதாரணமாக நிகழ்த்துகின்றனர்.

பெண் சுற்றுலா பயணிகளுக்கு எதிரான கற்பழிப்பு குற்றங்கள் கட்டுப்படுத்த இயலாத அளவிற்கு பெருகியுள்ளதை அடுத்து மத்திய அமைச்சர் ஒருவர் 'சுற்றுலா பயணிகள் குட்டைப்பாவாடை அணிவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்' என கூறியது கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

அமைச்சரின் கருத்து சர்ச்சைகளை ஏற்படுத்தினாலும் நிதர்சனமும் அதை ஒத்தே இருக்கின்றது என்பதையும் மறுக்க இயலாது. எனவே, பெண்கள் சுற்றுலா செல்ல இந்தியா ஏற்ற இடமே அல்ல, அதற்கும் மீறிச் செல்வது அவர்களது சொந்த முடிவுக்கு உட்பட்டது//

என எச்சரித்துள்ளது.

Source: http://www.bestwondertrip.com
தமிழில்: நம்ம ஊரான் 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.