.

Pages

Wednesday, April 25, 2018

கர்ப்பிணி தாய்மார்களுக்கான பரிசோதனை முகாம் (படங்கள்)

பேராவூரணி ஏப்.24
பேராவூரணி வட்டாரம் செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்  செவ்வாய் அன்று கர்ப்பிணி தாய்மார்களுக்கான பரிசோதனை முகாம் நடைபெற்றது.

வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வி.சௌந்தரராஜன் தலைமை வகித்தார். மருத்துவ அலுவலர்கள் டாக்டர்கள் எச். இர்ஷத் நஸ்ரின்,  சிவரஞ்சனி, கோகிலம் ஆகியோர் கர்ப்பிணி பெண்களை பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினர்.

முகாமையொட்டி சுகாதார நிலைய வளாகத்தில் வளர்க்கப்படும் பசுமாட்டின் பாலால் தயாரிக்கப்பட்ட கல்கண்டு பால், சுகாதார நிலைய வளாகத்தில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட அவித்த வேர்க்கடலை, தர்பூசணி பழம் கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் சத்தான மதிய உணவும் வழங்கப்பட்டது. பின்னர் வீட்டிற்கு சென்ற கர்ப்பிணி தாய்மார்களிடம்  தோட்டத்தில் விளைந்த பச்சைக்காய்கறிகள் மற்றும் பலா சுளைகள் வழங்கப்பட்டது.

இம்முகாமில் சுகாதார செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள்,  மருந்தாளுநர் சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.