.

Pages

Saturday, April 28, 2018

அதிராம்பட்டினம் அல் மத்ரஸத்துஸ் ஸலாஹியா அரபிக்கல்லூரி 119-வது ஆண்டு விழா ~ பட்டமளிப்பு விழா (படங்கள்)

அதிராம்பட்டினம், ஏப்.26
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் அல் மதரஸத்துஸ் ஸலாஹியா அரபிக்கல்லூரி 119-வது ஆண்டு விழா மற்றும் மவ்லவி, ஹாஃபிழ், காரி பட்டமளிப்பு விழா காதிர் முகைதீன் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை காலை நடைபெற்றது.

விழாவுக்கு, மவ்லவி எல்.எம்.எஸ் முகமது அப்துல் காதர் தலைமை வகித்தார். எம்.கே.என் மதரஸா டிரஸ்ட் செயலர் எஸ்.ஜே அபுல் ஹசன் மற்றும் ஆட்சி மன்றக் குழுத் தலைவர், உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.

மவ்லவி. பி.எம்.எம் ஆதம் லெப்பை ஃபலாஹி, மவ்லவி ஜியாவுத்தீன் ஆகியோர் மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி வாழ்த்துரை வழங்கினார். இதில், கல்லூரி மாணவர்கள் மவ்லவி. முகமது அனஸ்க்கு ஸலாஹி ஆலிம் மற்றும் காரி பட்டங்களும், எஸ்.அப்துல்லாவுக்கு காரி பட்டமும், எம்.எஸ் சஹ்ல், எம்.எஸ் சுஹைல், ஏ.முகமது வாசிம் அக்ரம், கே. சபீர் ஆகிய 4 பேருக்கு ஹாஃபிழ் பட்டங்கள் வழங்கப்பட்டன. மேலும், கல்லூரியில் அதிக மதிப்பெண் மற்றும் கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

சிறப்பு விருந்தினராக ஜம்இய்யத்துல் உலமா பத்வா குழு உறுப்பினர் மவ்லவி எம்.எச்.எம் யஹ்யா விழாப் பேரூரை வழங்கினார். மேலும்,  திருநெல்வேலி ரியாழுல் ஜினான் அரபிக் கல்லூரி முதல்வர் எம்.ஹுமாயுன் கபீர், கல்லூரி பேராசிரியர் மவ்லவி எஸ்.ரஷீத் அகமது காசிமி ஆகியோர் சிறப்புரை வழங்கினர்.

கல்லூரி முதல்வர் மவ்லவி ஏ.எஸ் அகமது இப்ராஹீம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். முன்னதாக கல்லூரிப் பேராசிரியர் மவ்லவி சபியுல்லா அன்வாரி வரவேற்றுப் பேசினார். விழா முடிவில், கல்லூரி மேலாளர் ஏ.எஸ்.எம் அகமது கபீர் நன்றி கூறினார். விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள், ஊர் பிரமுகர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.