.

Pages

Thursday, April 19, 2018

இணையவழிச் சான்று வழங்கும் முகாம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஏப்.19-
பிரதம மந்திரி உஜ்வலா யோஜனா (பிரதம மந்திரி சமையல் எரிவாயு பஞ்சாயத்து) திட்டத்தின் கீழ் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பெண் பயனாளிகளுக்கு புதிய இலவச எரிவாயு வழங்கப்படுகிறது.

இத்திட்டத்திற்கு தேவைப்படும் சாதி சான்று உள்ளிட்ட சான்றிதழ்களை இணையவழியில் விரைந்து வழங்குவதற்கான சிறப்பு முகாம், பட்டுக்கோட்டை வட்டம் நடுவிக்கோட்டை கிராமத்தில் வியாழன் அன்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பட்டுக்கோட்டை வட்டாட்சியர் சாந்தகுமார் தலைமை வகித்தார். மண்டல துணை வட்டாட்சியர் நல்லதம்பி, வருவாய் ஆய்வாளர் கண்ணகி, கிராம நிர்வாக அலுவலர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இம்முகாமில் 123 விண்ணப்பங்கள் வரப்பெற்றது. பரிசீலனைக்கு பிறகு 84 மனுக்களுக்கு உடனடியாக சான்றிதழ் வழங்கப்பட்டது.
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.