.

Pages

Wednesday, April 25, 2018

பட்டுக்கோட்டையில் கடலோரப் பகுதி வரைபடங்கள் குறித்து கருத்து கேட்புக் கூட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடலோர பகுதி வரைபடம் தயார் செய்தல் தொடர்பாக கடலோர பகுதியில் வசிக்கும் பொது மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில் இன்று (25.04.2018) புதன்கிழமை நடைபெற்றது.

கடற்கரை மேலாண்மை திட்டத்தின் கீழ் இந்திய அரசின் சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை மாறுபாடு அமைச்சகத்தின் சார்பில் கடலோர பகுதி வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில்  64 கடலோர பகுதி வரைபடங்கள் இத்திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ளது. தயாரிக்கப்பட்ட கடலோர வரைபடங்கள் பொது மக்களுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டு விளக்கவுரை அளிக்கப்பட்டது.

பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி வட்டங்களை சேர்ந்த கடலோர பகுதியில் வசிக்கும் பொதுமக்கள்  இக்கூட்டத்தில் கலந்து கொண்டு கடலோர பகுதி வரைபடம் குறித்த தங்களின் கருத்துக்கள் மற்றும் ஆட்சேபனைகளை  மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் தெரிவித்தனர். பொது மக்களின் கருத்துக்களை பதிவு செய்து கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். 

இந்த கருத்துக் கேட்பு கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல், ஊராட்சி உதவி இயக்குநர் முருகேசன், வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராசு, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் லெட்சுமி, வட்டாட்சியர்கள் சாந்தகுமார் (பட்டுக்கோட்டை), பாஸ்கரன் (பேராவூரணி) மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.