அதிரை நியூஸ்: ஏப்.19
துபையில் 40 ஆயிரம் திர்ஹம் மதிப்புள்ள இந்திய குடும்பத்தின் நகைகளை குப்பையில் எறிந்த பணிப்பெண்
துபையில் அல் கிஸஸ் பகுதியில் வசித்து வரும் ஒரு இந்திய குடும்பத்தில் பணியாற்றும் பணிப்பெண் ஒருவர் குப்பை என நினைத்து சுமார் 40,000 திர்ஹம் (சுமார் 7 ¼ லட்ச ரூபாய்) மதிப்புள்ள நகையை பையோடு தவறுதலாக குப்பைத் தொட்டியில் வீசியெறிந்தார்.
அல் கிஸஸ் பகுதியில் தெரு துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி ஒருவர் அந்த நகைப் பையை கண்டெடுத்து போலீஸாரிடம் ஒப்படைத்துவிட்டு அவரது பணியை பார்க்க சென்றுவிட்டார், (இந்த ஏழைத் துப்புரவு தொழிலாளியின் நேர்மையை "அதிகரித்துள்ள செயின் பறிப்பு சம்பவங்களால் நகைகளையும், உயிரையும், உதிரத்தையும் பலி கொடுத்து வரும்" நம் தமிழகப் பகுதிகளில் வாழ்பவர்களே சிறப்பாக உணர்ந்து கொள்ள இயலும்)
2 நாட்கள் நகையைத் தேடிய இந்தியக் குடும்பம் இறுதியாக நகை திருடு போய்விட்டதாக புகார் தருவதற்காக அல் கிஸஸ் போலீஸ் நிலையம் செல்ல, அங்கிருந்த போலீஸார் அவர்களது நகையை அடையாளம் கேட்டு ஒப்படைக்க இன்ப அதிர்ச்சியில் உறைந்து நின்றது இந்தியக் குடும்பம்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.