.

Pages

Monday, April 23, 2018

TNPSC சான்றிதழ் சரிபார்ப்பு இன்று (ஏப்.23) முதல் இ-சேவை மையங்களில் பதிவேற்றம்!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும்  தேர்வுகளில்  தேர்ச்சி பெற்ற மாணவர்களின் சான்றிதழ்களை இனி; அரசு இ-சேவை மையங்களிலேயே பதிவேற்றம் செய்து சரி பார்ப்பு செய்திடலாம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் நடத்தப்படும் அனைத்துத் தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் சான்றிதழ்கள் அனைத்தும் இனி வரும் நாட்களில் பொது இ-சேவை மையங்களிலேயே பதிவேற்றம் செய்து, இணைய தளம் மூலம் சான்றிதழ்கள் சரி பார்ப்பு செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தரவரிசைப்படி தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரி பார்ப்பு மற்றும் கலந்தாய்வு என இரு முறை சென்னைக்கு வந்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இதன் முதற்கட்டமாக குரூப் 2ஏ தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் தங்களது மூலச் சான்றிதழ்களை (Original Certificate) தேர்வாணைய இணைய தளத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கீழ் இயங்கும் பொது இ-சேவை மையங்கள் மூலமாக இன்று (23.04.2018) திங்கட்கிழமை முதல் பதிவேற்றம் செய்யும் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி அலுவலகம் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கீழ் இயங்கும் அனைத்து பொது இ-சேவை மையங்களிலும் இச்சேவை விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.  சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய ஒரு பக்கத்துக்கு ரூ.5 கட்டணமாக செலுத்த வேண்டும். தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தில் போட்டி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.