.

Pages

Saturday, April 21, 2018

குடிமைப் பணி நாள் விழாவில் கருத்தரங்கம் மற்றும் பயிலரங்கம் (படங்கள்)

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் மற்றும் சுகாதாரத்துறையின் சார்பில் குடிமைப் பணி நாள் விழாவில் குழந்தை வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்துதல் மற்றும் செம்மைப்படுத்துதல் கருத்தரங்கம் மற்றும் பயிலரங்கம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (21.04.2018) தொடங்கி வைத்தார்.

பயிலரங்கத்தினை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது; 
இந்தியா முழுவதும் குடிமைப்பணி நாள் இன்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களை சிறப்பித்து, ஒவ்வொரு வருடம் ஒவ்வொரு துறையினை தேர்வு செய்து அத்துறையில் மேற்கொள்ளும் பணிகள் குறித்தும், பணிகளை செம்மைப்படுத்தி செயல்படுத்துவது குறித்தும் இந்நாளில் பயிற்சி வழங்கப்படுகிறது. அதன் தொடர்பாக இன்று ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படும பணிகள் குறித்து இங்கு விவாதித்து சிறப்பான முறையில் செயல்படுத்துவது குறித்து பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. மக்களுக்காக பணிகள் செய்ய மக்களால் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகள் மூலம் ஏற்படுத்தப்படும் சட்ட திட்டங்கள் செயல்படுத்துவதற்கு குடிமைப்பணி தேர்வுகள் மூலம் திறன் மிக்க பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றது.  சுதந்திரம் வாங்குவதற்கு முன்பாக போட்டித் தேர்வுகள் ஆங்கிலேயர்களால் நடத்தப்பட்டு, லண்டனில் சென்று தேர்வு எழுத வேண்டிய சூழல் இருந்தது.  சுதந்திரத்திற்கு பின் அனைத்து மக்களுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் போட்டித் தேர்வுகள்  நடத்தப்பட்டு வருகின்றன.  ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பயனாளியாகிய குழந்தைகள் அனைவருக்கும் குடிமைப் பணி தொடர்பான கல்வியினை ஊக்குவிக்கும் விதமாக அங்கன்வாடி மேற்பார்வையாளர்கள் மற்றும் பணியாளர்கள் குழந்தைகளுக்கு அறிவுரை வழங்கி ஊக்குவிக்க வேண்டும்.  அதற்கு இப்பயிற்சினை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.  இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி நடைபெற்ற  கருத்தரங்கம் மற்றும் பயிற்சி வகுப்பில் மகப்பேறு மரணம் சிசு மரண குறைப்பு, வளர் இல்லம் பெண்கள்-குழந்தைகளின் பாதுகாப்பு நலன் குறித்து விவாதிக்கப்பட்டு பயிற்சி வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்நாதன், மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல், சுகாதாரத்துணை துணை இயக்குநர் டாக்டர் ஏ.சுப்ரமணி, பயிற்சியாளர் முன்னாள் அரசு மருத்துவர் ராதிகா மைக்கேல், மாற்றுத்திறனாளி நல அலுவலர் ரவிச்சந்திரன், திட்ட அலுவலர் ராஜ்குமார், வட்டார மருத்துவர்கள் மற்றும் மருத்துவ அலுவலர்கள், வட்டார அளவிலான குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர், அங்கன்வாடி மேற்பார்வையாளர்கள், மற்றும் பணியாளர்கள், சமூக நல செவிலியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.