ஹஜ் செய்திகள்: மினா குடில்களுக்கு (Tents) 20,000 நவீன Freon ஏசி வசதிகள் செய்யப்பட்டன.
ஹஜ் கிரிகைகளில் ஒன்றான மினா டென்ட்டுகளில் தங்கும் போது வீசும் வெப்பத்தை சமாளிப்பதற்காக தண்ணீரை அடிப்படையாக கொண்டு இயங்கும் ஏர் கூலர்கள் நிறுவப்பட்டிருந்ததை மாற்றிவிட்டு அதற்கு பதிலாக வாயுவை அடிப்படையாக கொண்டு இயங்கும் Freon ஏர் கண்டிஷனர்கள் பொருத்தப்பட்டுள்ளன.
3 கட்டங்களாக நிறுவப்பட்டு வந்த நவீன மேம்படுத்தப்பட்ட ஏர் கண்டிஷனர்களை பொருத்தும் கடைசிகட்டப்பணி நிறைவடைந்தது. கடைசிகட்டமாக 20,000 Freon ஏர் கண்டிஷனர்கள் நிறுவப்பட்டுள்ள நிலையில் இதன் முதல்கட்டப்பணிகள் 2016 ஆண்டு நடைபெற்ற போது சுமார் 12,500 ஏர் கண்டிஷனர்கள் பொருத்தப்பட்டிருந்தன. அதேபோல் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற 2 ஆம் கட்டப்பணியின் போது பல புதிய ஏசிக்கள் பொருத்தப்பட்டன.
இந்த நவீன Freon ஏசிகள் மூலம் சுமார் 33 டிகிரி செல்ஷியஸ் வரை நிலவும் வெப்பம் 21 டிகிரி செல்ஷியஸாக மினா டென்ட்டுகளில் குறைந்து காணப்படும். பழைய ஏர் கூலர்கள் தினமும் 12 ஆம்பியர்கள் மின்சாரத்தை பயன்படுத்திய நிலையில் இப்புதிய ஏர் கண்டிஷனர்கள் 5 ஆம்பியர்களை மட்டுமே பயன்படுத்தும். இதற்கிடையில் புனிதப் பகுதிகளில் (Holy Sites) ஏற்பட்டுள்ள தேவைகளுக்கு ஏற்ப மின்சக்தியை அதிகப்படுத்தி வழங்கும் நடவடிக்கை சவுதி மின்துறை (The Saudi Electricity Company (SEC) துவக்கியுள்ளது.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
This comment has been removed by the author.
ReplyDelete