அதிரை நியூஸ்: ஏப். 25
துபை விமான நிலையங்கள் (டெர்மினல் 1,2,3) இடையே 7 நிமிடங்களில் கடந்து செல்லும் ஹைப்பர்லூப் போக்குவரத்து திட்டம் நிறைவேற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபையிலிருந்து அபுதாபிக்கு சுமார் 12 நிமிடங்களிலும், ஃபுஜைராவிற்கு 10 நிமிடங்களில் செல்லும் அதிநவீன போக்குவரத்திற்கான 'ஹைப்பர்லூப்' (Hyperloop) திட்டங்களை நடைமுறைப்படுத்த கடந்த சில வருடங்களாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது அறிந்ததே.
இந்நிலையில் துபை சர்வதேச விமான நிலையத்திலிருந்து (டெர்மினல் 1,2,3) துபை அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்திற்கு (Dubai World Central - DWC) 7 நிமிடங்களுக்குள் செல்லும் ஹைப்பர்லூப் போக்குவரத்து திட்டத்திற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக துபையில் நடைபெற்று வரும் '25வது அரேபியன் டிராவல் மார்க்கெட் 2018' என்ற கண்காட்சி கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும்போது துபையின் இரு சர்வதேச விமான நிலையங்களுக்கிடையே மணிக்கு 3,400 பேர்களும், நாளொன்றுக்கு 128,000 பேர்களும், வருடத்திற்கு சுமார் 24 மில்லியன் பேர்களும் பயணிக்க முடியுமாம்.
துபை – அபுதாபி, துபை - ஃபுஜைரா இடையேயான ஹைப்பர்லூப் போக்குவரத்து திட்டங்கள் வெற்றிபெற்ற பின் அமீரகத்தின் பிற நகரங்களுக்கும், அண்டை அரபு நாடுகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும், இவை அனைத்தும் சாத்தியமானால் துபையிலிருந்து சவுதியின் ரியாத் நகருக்கு 40 நிமிடங்களுக்குள் சென்றுவிடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source: AMEinfo.com / Msn
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.