தஞ்சாவூர் திலகர் திடலில் 29-வது சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையிலும், மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் முன்னிலையிலும், வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு இன்று (23.04.2018) திங்கட்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்து பேசியதாவது;
மாநிலம் முழுவதும் சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. நமது மாவட்டத்திலும் சாலை பாதுகாப்பு வார விழா இன்று கொண்டாடப்படுகிறது. சாலை விதிகளை மதித்து இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் தலைகவசம் அணிந்து மிதமான வேகத்தில் வாகனத்தை ஒட்ட வேண்டும். கார் ஓட்டுநர்கள் சீட்டு பெல்ட் அணிந்து வாகனத்தை இயக்க வேண்டும்.
இன்று நடைபெறும் விழிப்புணர்வு பேரணியை காவல் துறையினர், அனைத்து ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி, வாகன விற்பனையாளர்கள், அடைக்கல மாதா கல்லூரி, பான் சக்கர்ஸ் கல்லூரி, பஸ் ஓட்டுநர்கள், பன்னாட்டு தாமரைக் கல்வி நிலையம், செயிண்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி, செஞ்சிலுவை சங்கம் ஆகியோர் 2000த்திற்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு அவர்கள் பேசினார்.
இப்பேரணியானது திலகர் திடலிலிருந்து இராசா மிராசுதார் அரசு மருத்துவமனை பழைய பேருந்து நிலையம் வழியாக பழைய மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நிறைவடைந்தது.
இப்பேரணியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார், வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், அரசு போக்குவரத்து கழக துணை மேலாளர் சதீஷ், தஞ்சாவூர் வட்டார போக்குவரத்து அலுவலர் என்.கார்த்திகேயன், கும்பகோணம் ஜி.அருணாச்சலம், மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜேந்திரன், கதிர்வேல், வெங்கிட்டுசாமி, வட்டாட்சியர் தங்கபிரபாகரன், செஞ்சிலுவை சங்க மாவட்ட பொருளாளர் முத்துக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.