வருகின்ற 05.05.2018 அன்று ஒரத்தநாட்டில் பெண்கள்
உயர்நிலைப் பள்ளியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தகவல் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் இணைந்து நடத்தும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 05.05.2018 அன்று ஒரத்தநாடு அரசினர் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரை நடைபெற உள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு, வேலைநாடுநர்களுக்கு பணிவாய்ப்புகளை அளிக்கவுள்ளனர்.
மேலும் இம்முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் ((TAMILNADU SKILL DEVELOPMENT CORPORTATION) இலவச பயிற்சி வகுப்பிற்கான பதிவுகளையும், தன்னார்வ பயிலும் வட்டத்தின் கீழ் SSC, TNPSC, IBPS, RRB போன்ற போட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பிற்கான பதிவுகள், அயல்நாட்டு வேலைவாய்ப்பிற்கான பதிவுகள் (OVERSEAS MANPOWER CORPORATION) மற்றும் வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவதற்கான பதிவுகள் ஆகியவை மேற்கொள்ளப்பட உள்ளன. இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள வேலைநாடுநர்கள், தங்களது சுய விவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை,
முன் அனுபவம் ஏதும் இருப்பின் அதற்கான சான்றிதழ் நகல்களுடன் கலந்து கொண்டு பயன்பெற மாவட்ட ஆட்சியர் அவர்களால் அறிவிக்கப்படுகிறது.
மேலும் இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனங்கள், தங்கள் நிறுவனங்களுக்கு தேவைப்படும் பணியாளர்களின் எண்ணிக்கை, எதிர்பார்க்கும் கல்வித்தகுதி மற்றும் அளிக்க இருக்கும் ஊதியம் போன்ற விவரத்தை addeotnj@gmaill.com, dddeotnj@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கவும். மேலும் விவரங்களுக்கு 04362-237037 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.