தஞ்சாவூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கல்வி விடுதிகளில் காலியாக உள்ள 40 சமையலர் பணிக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (26.04.2018) தெரிவித்துள்ளார்கள்.
இன்று (ஏப்.26) வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பது;
தஞ்சாவூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கல்வி விடுதிகளில் 40 சமையலர் பணியிடங்கள் (ஆண் - 20, பெண் -20) நேர்காணல் மூலம் இன சுழற்சி அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தமிழில் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். சைவ மற்றும் அசைவ உணவு வகைகள் தரமாகவும், ருசியாகவும் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
01.07.2018 அன்று SC/ST பிரிவினர்கள் 18 முதல் 35 வயதிற்குட்பட்டவர்களாகவும் BC, BCM, MBC & DNC பிரிவினர்கள் 18 வயது முதல் 32 வயதிற்குட்பட்டவர்களாகவும், இதரப் பிரிவினர்கள் 18 வயது முதல் 30 வயதிற்குட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளில் அனுமதிக்கப்பட்டவாறு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
மேற்கண்ட தகுதியுடைய நபர்கள் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய சான்றுகளின் நகல்களை இணைத்து சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தினை ஒட்டி 10.05.2018 அன்று மாலை 5.45 மணிக்குள் சமர்ப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
காலதாமதமாக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் மற்றும் முகவரி தவறாக இருந்து அழைப்பாணை திரும்ப பெறப்படும் விண்ணப்பங்கள் மீது பரிசீலணை செய்யப்படாது எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மேலும் இதற்கு முன்னர் 2015 ஆம் ஆண்டு சமையலர் காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்ய மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திடமிருந்து பெறப்பட்ட பட்டியல்கள் மற்றும் பத்திரிக்கை செய்தி வாயிலாக மேற்கொள்ளப்பட்ட நேரடி நியமன முறை ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்கள்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.