அதிரை நியூஸ்: ஏப். 22
கல்விக்கு வயது தடையல்ல என நிரூபித்துள்ளார் தன் இளமை காலங்களில் படிக்க வாய்ப்பை பெறதா 96 வயது மெக்ஸிகோ நாட்டு பாட்டி 'டோனா லுபிட்டா' (Dona Lupita) என செல்லமாக அழைக்கப்படுகின்ற குவாடலுப்போ பலாஸியஸ் ( Guadalupe Palacios) என்கிற இயற்பெயர் கொண்ட பாட்டி. தனது 100வது வயதிற்குள் உயர்நிலைப் பள்ளிப்படிப்பை முடிக்க வேண்டும் என உறுதி பூண்டுள்ளார் இந்த 6 பிள்ளைகளின் தாய்.
பலாஸியஸ் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்ததால் இளம் வயதில் பள்ளிக்கு செல்லாமல் விவசாய வேலைகளுக்குச் சென்றுள்ளார். பின்பு இளம் வயதில் கோழி வியாபாரத்தில் ஈடுபட்டதன் மூலம் மனக்கணக்குகளில் சிறப்புடன் திகழ்ந்துள்ளார் எனினும் எழுதப் படிக்கத் தெரியாதாம். எனவே, தனது 92வது வயதில் அரசின் முதியோர் கல்வித் திட்டத்தில் சேர்ந்து பயின்றுள்ளார் பின்பு 2015 ஆம் ஆண்டு ஆரம்பப் பாடசாலை மற்றும் நடுநிலை பள்ளிப்படிப்பையும் 4 ஆண்டுகளுக்கு குறைவான காலகட்டத்திற்குள் முடித்துள்ளார்.
தற்போது தன்னைவிட சுமார் 80 ஆண்டுகள் இளமையான குழந்தைகளுடன் ஒன்றாக அமர்ந்து, சீறுடையில் வசீகரிக்கும் பலாஸியஸூக்கு கணிதமும் (Mathematics) வேதியியலும் (Chemistry) பிடித்த பாடங்களாம். சக மாணவ, மாணவிகளுடனும் மிக சகஜமாகவும் பழகி வருகிறாராம். உயர்நிலை படிப்பு முடிந்த பின் எல்கேஜி (LKG) குழந்தைகளுக்கு டீச்சராக வேண்டும் என்று ஆசையாம், அப்படியே ஆகட்டுமாக!
Source: Emirates 247 / AFP
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.