அதிரை நியூஸ்: ஏப்.22
உலகின் முதிய வயது பெண்ணாக அறியப்பட்ட ஜப்பானிய மூதாட்டி 117 வயதில் மரணம்
உலகில் வாழும் அதிக வயது மூப்பானவர்களை கண்டறிந்து அறிவித்து வருகிறது கின்னஸ் சாதனை நிறுவனம். நடப்பு உலகில் முதிய வயது பெண்ணாக அறிவிக்கப்பட்டிருந்த ஜமைக்காவைச் சேர்ந்த வயலெட் பிரவுன் என்ற மூதாட்டி 2017 செப்டம்பர் மாதம் தனது 117வது வயதில் காலமானதை தொடர்ந்து ஜப்பானிய மூதாட்டியான நபி தஜிமா ( Nabi Tajima) உலகில் வாழும் அதிக வயதுடையவராக கின்னஸ் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்படவிருந்த நிலையில் மரணமடைந்துள்ளார்.
தஜிமா 1900 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் தேதி பிறந்தவர், இவர் நேற்றிரவு (சனிக்கிழமை) 8 மணியளவில் வயது மூப்பின் காரணமாக முதியோர் இல்லத்திலிருந்து ககோஷிமா பிரதேசத்தில் அமைந்துள்ள ககோய் தீவிலுள்ள ஒரு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற நிலையில் மரணமடைந்தார்.
அதேபோல் தற்போதும் வாழ்ந்து வரும் மஸாஸோ நொனாகா (Masazo Nonaka) என்ற 112 வயது ஜப்பானிய ஆணே உலகின் மிக வயதுடைய ஆணாக கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதியன்று அங்கீகரிக்கப்பட்டுள்ளார். பொதுவாக ஜப்பான் நாட்டில் நீண்ட காலம் வாழும் முதியவர்கள் அதிகம். அரசு புள்ளிவிபரப்படி தற்போது 100 வயதை கடந்த முதியவர்கள் சுமார் 68,000 பேர் ஜப்பானில் வாழ்ந்து வருகின்றனர்.
Source: Emirates 247 / AFP
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.