.

Pages

Wednesday, April 25, 2018

எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் துபை பயணிகளுக்கு சிறப்பு வசதி!

அதிரை நியூஸ்: ஏப்.25
எமிரேட்ஸ் ஏர்லைன்ஸில் பயணிப்பவர்கள் வீட்டிலிருந்தபடியே செக்-இன் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எமிரேட்ஸ் ஏர்லைன்ஸில் பறக்கும் எந்த வகுப்பு பயணிகளும் வீட்டிலிருந்தவாறே செக்-இன் (Check-In), செக்யூரிட்டி செக்கிங் (Security Checking) செய்து பேக்கேஜை (Baggage) கொள்வதுடன் போர்டிங் பாஸையும் (Boarding Pass) தங்குமிடத்திலேயே தரும் கட்டண சேவையை அறிவித்துள்ளது. இந்த வசதி துபையில் வசிப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

குறைந்தபட்சம் 12 மணிநேரத்திற்கு முன்பாக எமிரேட்ஸ் இணையதளம் வழியாக முன்பதிவு செய்தால் துபையில் நீங்கள் தங்கியிருக்கும் வீடு, ஹோட்டல், அலுவலகம் என எந்த இடத்திற்கும் நேரில் வரும் ஊழியர் ஒருவர் உங்களுடைய பேக்கேஜ்களை பெற்றுக் கொண்டு எடைபோட்டு அதற்கான டேக்களை ஓட்டுவதுடன் (Tag Bags) உங்களுடைய போர்டிங் பாஸ்களையும் (Boarding Pass) வீட்டிலேயே தருவார்.

துபை விமான நிலையத்திற்கு வரும் நீங்கள் எங்கும் காத்திருக்காமல் நேராக இமிக்கிரேசன் கவுண்டருக்கு சென்று கடமைகளை முடித்துக் கொண்டு உங்களுடைய பயணத்தை தொடரலாம்.

இந்த சேவைக்கு 350 திர்ஹம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகப்பட்சம் 7 லக்கேஜ்கள் வரை கொடுக்கலாம். கூடுதலாக வரும் ஒவ்வொரு பேக்கேஜ் மீதும் 35 திர்ஹம் சேவை கட்டணம் செலுத்த வேண்டும். இந்த சேவைக்காக சிறப்பு வேன் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த வீட்டிலிருந்தே செக்-இன் செய்யும் சேவையை கடந்த அக்டோபர் மாதத்திலிருந்தே எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பரிசோதனை அடிப்படையில் மேற்கொண்டு வந்தது வெற்றியடைந்ததை தொடர்ந்து தற்போது முழுஅளவில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

மேலும் விபரங்களுக்கு... 
Click here for more information on these services.

Source: Al Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.