அதிரை நியூஸ்: ஏப்.17
27 ஆண்டுகளாக இந்தியாவை சுற்றி வந்து சிகிச்சையளிக்கும் லைஃப் லைன் எக்ஸ்பிரஸ் ரயில் மருத்துவமனை.
கடந்த 1991 ஆம் ஆண்டு The non-profit "Impact India Foundation" என்ற அமைப்பால் துவக்கப்பட்ட இந்த ரயில் மருத்துவமனையில் இதுவரை சுமார் 1.2 மில்லியன் இந்தியர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. 7 பெட்டிகளுடன் மாதத்திற்கு ஒரு மாவட்டம் என இந்தியா முழுவதும் சுற்றிவரும் இந்த மருத்துவமனை எக்ஸ்பிரஸில் 20 நிரந்தர மருத்துவ ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
சிறப்பு மருத்துவர்கள் ரயில் சிகிச்சை வழங்க நிறுத்தப்படும் பகுதியின் அருகிலுள்ள மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிகளிலிருந்து தொண்டாற்ற அழைக்கப்படுகின்றனர். கொண்டல் ராவ் ஹாலிவாலே என்ற 52 வயது மருத்துவர் கடந்த 25 ஆண்டுகளாக இந்த லைஃப் லைன் எக்ஸ்பிரஸில் பணியாற்றி வருகிறார்.
இந்த நடமாடும் ரயில் மருத்துவமனையில் பல், கண்புரை, கேன்சர், அன்னப்பிளவு, எலும்பியல் சிகிச்சை போன்ற பலவற்றையும் ஏழைகளுக்கு இலவசமாகவே வழங்குகின்றனர். இந்த எக்ஸ்பிரஸில் தனித்தனி ஆபரேசன் தியேட்டர்கள், நோயாளிகளுக்கான படுக்கை வசதிகள், உணவு வசதிகள், மருத்துவர்களுக்கான ஓய்வறைகள் என பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
உலகிலேயே மிகக் குறைவாகவே இந்தியா தனது மொத்த வருமானத்திலிருந்து சுமார் 1 சதவிகிதத்தை மட்டுமே சுகாதாரத்திற்காக ஒதுக்கி வருகிறது. இந்நிலையில் இதுபோன்ற நடமாடும் எக்ஸ்பிரஸ் மருத்துவமனைகள் ஏழைகளுக்கு மிகவும் பயனுள்ள ஒன்றாகும்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.