கடல் சீற்றத்தின் காரணமாக தென் தமிழகத்தின் கடற்கரை ஒட்டிய பகுதிகளில். குறிப்பாக கன்னியாகுமரி மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்தில் கடலோரத்தில் உள்ள தாழ்வான பகுதிகளில் 21-04-2018 காலை 08.30 மணியிலிருந்து 22.04.2018 இரவு 11.30 மணி வரையில் 18 முதல் 22 விநாடிகள் இடைவெளியில் 2.5 - 3.5 மீட்டர் (அதாவது 8.25 அடி - 11.50 அடி) உயரத்திற்கு கடல் அலைகள் எழுந்து சீற்றத்துடன் காணப்படும் என இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே. மீனவர்கள் மற்றும் கடலோரப்பகுதிகளில் உள்ள மக்கள் கீழ்க்கண்ட அறிவுரைகளை கட்டாயமாக பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
1) கடல் சீற்றத்தின் காரணமாக, கடற்கரை பகுதிகள் இதன் தாக்கத்தை பொழுதும் உணரும். எனவே. கடற்கரை ஒட்டிய பகுதிகளில் படகுகள் செல்லவேண்டாம்.
2) படகுகள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டு சேதமடைவதை தவிர்க்கும் பொருட்டு படகுகளை போதிய இடைவெளியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
3) மேற்கண்ட நாட்களில் கடற்கரைப்பகுதிகளில், பொதுமக்கள் எவரும் பொழுதுபோக்கு விளையாட்டுகளிலும், வேடிக்கை பார்க்கும் நோக்கிலும் ஈடுபடவேண்டாம் என எச்சரிக்கப்படுகிறது.
4) கடற்கரையிலிருந்து கடலுக்குள் படகுகள் செல்லவேண்டாம் எனவும். கடலிலிருந்து கடற்கரைக்கு படகுகள் வரவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்படுகிறது,
மேற்கண்ட தகவலை முதன்மைச்செயலர் மற்றும் வருவாய் நிருவாக ஆணையர் டாக்டர் கே.சத்யகோபால் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.