.

Pages

Thursday, April 26, 2018

துபையில் மாட்டு மூத்திரம் விற்பதாக வாட்ஸப் செய்தி பரவியதை அடுத்து அதிகாரிகள் சோதனை!

அதிரை நியூஸ்: ஏப். 26
துபையில் மாட்டு மூத்திரம் விற்பதாக வாட்ஸப் செய்தி பரவியதை அடுத்து அதிகாரிகள் சோதனை

துபையில் செயல்படும் ஒரு சூப்பர் மார்க்கெட் குழுமத்தில் 'கவ்மூத்ரா' என லேபிள் ஒட்டப்பட்ட 50 மில்லி மாட்டு மூத்திர பாட்டில்கள் தலா 2 திர்ஹம் என விற்கப்படுவதாக சூப்பர் மார்க்கெட் செல்ஃபில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பது போன்ற போட்டோவுடன் வாட்ஸப் செய்தி ஒன்று பரவியதுடன் அதில் தென்னிந்திய மொழி ஒன்றில் பேசிய நபர் அரபிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வாட்ஸப் தகவல் பரவியதை அடுத்து துபை முழுவதுமுள்ள அந்த சூப்பர் மார்க்கெட் குழுமத்தின் கடைகள் மற்றும் குடோன்களில் துபை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியதுடன் அதன் இறக்குமதி பட்டியலையும் பரிசோதித்தனர். எனினும், மாட்டு மூத்திரம் விற்பதற்காக எந்த ஆதாரமும் சிக்கவில்லை என்பதுடன் இறக்குமதி ஆதாரங்களும் கிடைக்கவில்லை என்பதை அடுத்து துபை முனிசிபாலிட்டி அதிகாரிகள் இந்த செய்தி பொய் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். எனினும், துபை முனிசிபாலிட்டியின் விளக்கத்தின்படி மாட்டு மூத்திர விற்பனை மற்றும் இறக்குமதி துபையில் தடை செய்யப்பட்டது என தெளிவுபடுத்தியுள்ளனர்.

அதேவேளை A2 Naturals என்ற மாட்டு மூத்திர ஏற்றுமதி நிறுவனத்தை பெங்களூரூவில் கூட்டாக நடத்தி வரும் ராதிகா மிக்லானி என்பவர் கூறியதாவது, தங்களுக்கு துபை உட்பட பல நாடுகளிலும் வாடிக்கையாளர்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார். இவரது மாட்டு மூத்திர நிறுவனம் வடிகட்டிய மாட்டு மூத்திர வியாபாரத்தில் சுமார் 1 பில்லியன் ரூபாய்களை புரட்டி வருவதாக எகனாமிக் டைம்ஸ் ஆப் இந்தியா தனது 2017 பிப்ரவரி இதழிலேயே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் விற்கும் மாட்டு மூத்திரத்தின் விலை பாலை விட கூடுதல் என்பதோடு சினை மாடுகளின் மூத்திரம் ரொம்ப ஸ்பெஷலாம். மருத்துவ குணங்கள் உண்டென்று வேறு அடித்து விட்டுள்ளார்கள் ஆனால் இவர்களின் மூட நம்பிக்கைகள் எதுவும் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவேயில்லை, இனியும் நிரூபிக்கப்பட போவதில்லை.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.