.

Pages

Monday, April 23, 2018

ஜார்கண்ட் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி வாகை சூடிய முஸ்லீம் லீக் வேட்பாளர்களுக்கு S.S.B நசுருதீன் வாழ்த்து!

அதிராம்பட்டினம், ஏப்.23
ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில், வெற்றி வாகை சூடிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளர்களுக்கு அக்கட்சியின் தமிழ் மாநிலத் துணைத் தலைவர் எஸ்.எஸ்.பி நசுருதீன் வாழ்த்து தெரிவித்தார். வெற்றி வாய்ப்பை வழங்கிய ஜார்கண்ட் மாநில பொதுமக்களுக்கு நன்றி கூறினார்.

இதுகுறித்து அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் எஸ்.எஸ்.பி நசுருதீன் கூறியது;
ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில், இ.யூ. முஸ்லிம் லீக் கணிசமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மக்கள் இ. யூ. முஸ்லிம் லீக் கட்சிக்கு அதிக ஆதரவளித்துள்ளனர். ஜார்கண்ட் மாநிலத்தில் கிரிடி மாநகராட்சியில் 6 இடங்களை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கைப்பற்றி வெற்றி வாகை சூடியது. மதுப்பூர் நகராட்சியில் 2 இடங்களை முஸ்லிம் லீக் கைப்பற்றி உள்ளது. ராம்கார் நகராட்சி 10 வது வார்டில் இ.யூ.முஸ்லிம் லீக் வேட்பாளர் இந்தர் தேவ் ராம் என்ற சகோதர சமுதாயத்தை சேர்ந்தவர் வெற்றி பெற்றுள்ளார்.

மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கு போட்டியிட்ட முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.  இ.யூ.முஸ்லிம் லீக் தேசியத் தலைவராக பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அண்மையில் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மேற்கொண்டு வந்த சமூக நலப்பணிகளுக்கு மக்கள் அங்கீகாரம் அளித்துள்ளனர். வெற்றி வாய்ப்பை வழங்கிய ஜார்கண்ட் மாநில பொதுமக்களுக்கு நன்றி. வெற்றி வாகை சூடிய இ.யூ. முஸ்லீம் லீக் கட்சி வேட்பாளர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். ஜார்கண்ட் மாநிலத்தில் அடுத்தடுத்து வரும் தேர்தல்களில் எங்கள் கட்சி தொடர்ந்து வெற்றி வாகை சூடுவது உறுதி' என்றார்.

1 comment:

  1. ஜார்கண்டில் உண்மை உணரப்பட்டது. நன்றி ஜார்கண்ட் மக்களுக்கு.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.