அதிரை நியூஸ்: ஜூலை 24
அமீரகத்தில் ஆகஸ்ட் 1 முதல் பொதுமன்னிப்பு துவங்குவதை முன்னிட்டு 9 இடங்களில் உதவி மையங்கள் அமைப்பு
அமீரகத்தில் சட்ட விரோதமாக தங்கியிருப்போர், விசா காலம் முடிந்தும் புதுப்பிக்காமல் தங்கியிருப்போர், வீடு மற்றும் பணியிடங்களில் இருந்து ஓடிப்போனாவர்கள், நாட்டிற்குள் சட்ட விரோதமான முறையில் நுழைந்தவர்கள் என அனைவரும் தங்களுடைய நிலையை அமீரகத்திற்குள் இருந்தவாறே சட்டப்பூர்வமாக மாற்றிக்கொள்ளலாம் அல்லது அபராதங்கள், தண்டனைகள் ஏதுமின்றி நாட்டை விட்டு முறையாக வெளியேறலாம், மீண்டும் அமீரகத்திற்குள் சட்டப்பூர்வமாக வர எந்தத் தடையும் விதிக்கப்படவும் மாட்டாது போன்ற சலுகைகளுடன் 90 நாட்கள் அவகாசம் வழங்கி அமீரக அரசு பொதுமன்னிப்பை அறிவித்துள்ளது. இந்த பொது மன்னிப்பு காலம் எதிர்வரும் ஆகஸ்ட் 1 முதல் ஆரம்பமாகிறது.
“Protect yourself by modifying your status” என்ற பெயரில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த 90 நாட்கள் பொதுமன்னிப்பு அவகாசம் முடிந்த பிறகு நாடு முழுவதும் அதிரடி தொடர் சோதனைகள் நடத்தப்படும். பிடிபடும் சட்டவிரோதிகள் மீது அபராதம் மற்றும் சிறைத்தண்டனைகள் விதிக்கப்படுவதுடன் நாட்டிற்குள் மீண்டும் நுழைய நிரந்தர தடை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமீரகத்திற்குள் எத்தகைய ஆவணங்களும் இன்றி கள்ளத்தனமாக நுழைந்தவர்களும் முறைப்படி உதவி மையங்கள் வழியாக வெளியேறலாம் என்றாலும் இவர்களுக்கு மட்டும் 2 வருட தடை விதிக்கப்படும், தடைக்குப் பின் மீண்டும் முறைப்படி அமீரகத்திற்குள் வரலாம் எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
மேலும் சட்டவிரோதமாக தங்கியிருப்போர் விரும்பினால் தங்களுடைய சொந்த (சுய) ஸ்பான்சரின் கீழ் அல்லது வேலைவாய்ப்பளிக்கும் ஒரு ஸ்பான்சரின் கீழ் 6 மாத விசாவில் இருந்து கொண்டு அமீரகத்தில் வேலை தேடிக் கொள்ளலாம் எனவும் சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் போரால் பாதிக்கப்பட்ட சிரியா, ஏமன் போன்ற நாடுகளைச் சேர்ந்த குடும்பத்தினர்களுக்கு ஒரு வருட ரெஸிடென்ஸ் விசாவும் வழங்கப்படும், இக்காலகட்டத்தில் அவர்களும் தங்களுடைய நிலையை மாற்றிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதவி மையங்கள்:
கீழ்க்காணும் அமீரக இமிக்கிரேசன் அலுவலகங்களே சிறப்பு உதவி மையங்களாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலைநாட்களில் தினமும் காலை 8 மணிமுதல் இரவு 8 மணிவரை செயல்படும். முறையான ஆவணங்கள் அனைத்தையும் சமர்ப்பித்தால் 2 வேலைநாட்களுக்குள் உங்களுடைய விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபுதாபி (Abu Dhabi) : ஷஹாமா (Shahama) இமிக்கிரேசன் அலுவலகம்
அல் அய்ன் (Al Ain) இமிக்கிரேசன் அலுவலகம்
கர்பியா (Garbia) இமிக்கிரேசன் அலுவலகம் (அபுதாபியின் மேற்குப்புற பிரதேசத்தினருக்காக - Abu Dhabi's western region)
துபை (Dubai) : அல் அவீர் (Al Aweer) இமிக்கிரேசன் அலுவலகம்
ஷார்ஜா (Sharjah), அஜ்மான் (Ajman), உம்மல் குவைன் (Umm Al Quwain), ராஸ் அல் கைமா (Ras Al Khaimah) மற்றும் புஜைரா (Fujairah): அதனதன் மெயின் இமிக்கிரேசன் அலுவலகங்கள் (Main Immigration Offices)
.
24 மணிநேரமும் இது சம்பந்தமான விபரங்களை தெரிந்து கொள்ள 80080 என்ற எண்ணில் அழைக்கவும்.
தேவையான ஆவணங்கள்:
பாஸ்போர்ட், ஒருங்கிணைந்த அடையாள எண் (Unified Identification No.) (ரெஸிடென்ஸி ஸ்டாம்ப் அல்லது விசாவில் காணப்படும் - if resident obtained entry or residency visa), நாட்டை - விட்டு வெளியேற விரும்புபவர்கள் மட்டும் விமான டிக்கெட் கொண்டு வர வேண்டும். பாஸ்போர்ட் இல்லாதவர்கள் தங்கள் நாடுகளின் தூதரகங்களிலிருந்து பெறும் ஆவணங்களுடன் வர வேண்டும்.
அமீரகத்திலேயே தொடர்ந்து சட்டப்பூர்வமாக தங்க விரும்புபவர்கள், டிரான்ஸ்பர் செய்து கொள்ள விரும்புபவர்கள் ஆகியோர் உங்களுக்கு வேலைவாய்ப்பளிக்கும் அல்லது ஸ்பான்சர் செய்யும் நிறுவனங்களிடமிருந்து அதற்கான செல்லுபடியாகும் ஆவணங்களை பெற்று வர வேண்டும்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.