அதிரை நியூஸ்: ஜூலை 16
இந்த வருடம் முதன்முதலாக 'மக்கா ரோடு இனிஷியேட்டிவ்' எனும் திட்டம் முழு மலேஷிய ஹஜ் யாத்ரீகர்களுக்கும், இந்தோனேஷியாவின் குறிப்பிட்ட அளவிலான யாத்ரீகர்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதன் அடிப்படையில் முதல் 2 விமானங்கள் கோலாலம்பூரிலிருந்து மதினா சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கின.
மக்கா ரோடு' என்ற திட்டத்தின் கீழ் மலேஷியா மற்றும் இந்தோனேஷியா ஹஜ் பயணிகளின் தடுப்பூசி சான்றுகள் மலேஷியாவிலேயே சரிபார்க்கப்படுவதுடன் அவர்களுடைய கைவிரல் பதிவுகள் எடுக்கப்பட்டு பாஸ்போர்டிலும் விசா ஸ்டாம்பிங் செய்து தரப்படும்.
மேற்குறிப்பிட்ட மலேஷிய, இந்தோனேஷிய ஹஜ் பயணிகள் சவுதி விமான நிலையங்களுக்கு வந்தவுடன் உள்நாட்டு விமான பயணியைப் போலவே மிகச்சாதரணமாக வெளியேறலாம். அவர்களுடைய லக்கேஜ்களும் சேகரிக்கப்பட்டு அவர்கள் தங்குமிடத்திற்கே கொண்டு சென்று வழங்கப்படும்.
இதற்கிடையில் அரபியர்கள் அல்லாத ஆப்பிரிக்க நாடுகளைச் (Non-Arab African Countries) சேர்ந்த முஸ்லீம்களின் ஹஜ் விமானங்களும் மதினா விமான நிலையத்திற்கு வந்திறங்கத் துவங்கியுள்ளன.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.