மல்லிபட்டினம், ஜூலை.24
தஞ்சாவூர் மாவட்ட மீனவர்கள் 7 பேரை எல்லை தாண்டிச் சென்று மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை அடுத்துள்ள மல்லிப்பட்டினம் கள்ளிவயல் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சைபுல்லா. இவரது விசைப்படகில் நாகை மாவட்டம் தரங்கம்பாடி குட்டியாண்டியூர் பகுதியை சேர்ந்த நாகப்பன் என்பவர் மகன் நாராயணன் (வயது 43), நாராயணன் மகன் சக்திதாஸ் (வயது 19), நாகை மாவட்டம் நாகூர் பகுதியை சேர்ந்த காசி மரைக்காயர் மகன் ஆயுள்பதி (வயது 14), நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரை பகுதியை சேர்ந்த கண்ணதாசன் (வயது 45) ஆகிய 4 பேரும், மல்லிப்பட்டினம் கள்ளிவயல் தோட்டம் பகுதியை சேர்ந்த அப்துல்வகாப் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், நாகை மாவட்டம் மாதேஸ் (வயது 19), பிரவீன் குமார் (வயது 30), பாலகிருஷ்ணன் (வயது 45)
ஆகிய 3 பேர் உள்ளிட்ட 7 பேர் 2 விசைப்படகுகளில் திங்கள்கிழமை மதியம் 2 மணிக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை எல்லை தாண்டி சென்று மீன்பிடித்ததாக கூறி மீனவர்கள் 7 பேரையும் கைது செய்து, படகுகளையும் பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மற்ற மீனவர்கள் விசைப்படகு உரிமையாளர்களுக்கும், கடலோர காவல் குழுமத்துக்கும் தகவல் அளிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மீனவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் மீனவர்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.